Sunday 25 September 2016

புன்மை நினைந்து இரங்கல்


மஞ்சட் பூச்சின் மினுக்கி  னிளைஞர்கள்
மயங்க வேசெயும் வாள்விழி மாதர்பால்
கொஞ்சிக் கொஞ்சி நிறையழிந் துன்னருட்
கிச்சை நீத்துக் கிடந்தன னாயினேன்
மஞ்சுற் றோங்கும் பொழிற்றணி காசல
வள்ள லென்வினை மாற்றுத னீதியே
தஞ்ச மென்று வந்தடைந்திடு மன்பர்கள்
தன்மை காக்கும் தனியருட் குன்றமே

இளைஞர்களே தன் அழகை காட்டி மயக்கும் மாதர் பின்னால்
போய் கெட்டு விடாதீர்கள். நம் உடலிலே - கண்மணியிலே ஒளியாக
துலங்கும் இறைவனை அறிந்து உணர்ந்து தஞ்சம் அடைவோமானால்
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவன் நம்முள் உள்ள
ஜோதி நம்மை காக்கும். வருக உன் உள்ள கமலத்தில் ஒளிரும் சுடர் மணியை
சரணடைக!

புரத்தைக் காட்டும் நகையினெரித்த தோர்
புண்ணியற்க்கு புகல் குருநாதனே - பாடல் 5

சிவபெருமான் முப்புரத்தையும் புன்னைகையால் எரித்தார் என சிவபுராணம்
கூறும், சிவனுக்கு பிரணவ உபதேசம் செய்தான் முருகன் அதனால் சிவகுருநாதன் ஆனான்!

"அப்பணி செஞ்சடை ஆதிபுராதானன் முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள். முப்புரமாவது மும்மல காரியம்" - திருமந்திரம். திருமூலர்

கதைசொல்பவர்களை மூடர்கள் என்கிறார்! இதன் உண்மைப்பொருள் என்னவென்றால் அதை வள்ளல் பெருமானும் குறிப்பிடுகிறார். சிவம் ஆகிய ஒளி நம் கண்மணி உள்ளே இருக்கிறது.கண்மணி மத்தியில் உள்ள துவாரம் அடைபட்டுள்ளது. நாம் தியானம் கண்ணை திறந்து நினைவை கண்மணி ஒளியில் வைத்து செய்யும்போது ஒளி பெருகி கண்மணி துவாரம் அடைபட்ட ஜவ்வு லேசாக விலகும். நம் வாய் உதடுகள் லேசாக பிரிவது தானே புன்னகை. கண்மணி ஜவ்வு லேசாக பிரிவதே உள் உள்ள சிவம் புன்னகைத்தார் என்பது, ஒளி லேசாக பிரிவதே உள் உள்ள சிவம் புன்னைகைத்தார் என்பது , ஒளி லேசாக தெரிந்தது எனப்பொருள். முப்புரம்  - மும்மலம். நம் மும்மலமும்
தான் ஜவ்வாக சிவத்தை மறைந்துள்ளது. ஜவ்வு விலகிற்று என்றால் முப்புரம் - மும்மலம் நீங்கியது என்றுதானே பொருள். சிவம் ஓங்கி வளர வளர ஒளி பெருகிவளரும் போது அந்த நெருப்பிலே ஜவ்வு மறைப்பு எரிந்துவிடும். இதுவே ஞான அனுபவ ஞானம்.  ஒளி பெருகி மலம் அற்று போனது. அந்த சிவனுக்கே குருவாக இருந்து உபதேசம் செய்தவன் முருகன் - ஆறுமுகன். எல்லோருக்குமே குரு சண்முக கடவுளான நம் கண்களே !

No comments:

Post a Comment