Friday 30 December 2016

45 செவியறிவுறுத்தல்



உலகியற் சுடுசுரத் துழன்று நாடொறும்
அலகில் வென் துயர்கிளைத் தழுங்கு நெஞ்சமே
இலகு சிற் பரகுக என்று நீறிடில்
கலகமி லின்பமாம் கதிகி டைக்குமே

நெஞ்சமே உலகியல் மாயையில் சிக்கி புற உஷ்ணம் ஏறி
உழன்று பலப்பல துன்பங்களில் வாடாது தப்ப வேண்டுமானால்
ஓயாது நம் சிற்பரமாம் நம் கண்மணி குகையில் உள்ள ஒளியை
எண்ணி எண்ணி நீர் பெருக தவம் செய்தால் பேரின்பம் கிடைக்கும்.

இவ்வினைச் சண்முக என்று நீறிடில் - பாடல் 3

சண்முகமான - ஆறுமுகமான நம் கண்கள் இரண்டிலும் நீர்
பெறுக, திருவை - ஒளியை நினைந்து தவம் செய்தால் நமக்கு
இல்லை வினையே, அருள் ஞான வாழ்வு கிட்டும். ஒப்பில்லா
சிவபதம் அடையலாம். அந்த=அச்சமே இல்லாத நிலை கிட்டும்.
எல்ல துன்பங்களும் நீங்கி பேரின்பம் கிட்டும்.


ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருஅருட்பாமாலை
www.vallalyaar.com

43 திருவருட் பேற்று விழைவு


உலகம் பரவும் பரஞ்சோதி
யுருவாம் குருவே யும்பரிடைக்
கலகம் தருசூர்க் கிளை களைந்த
கதிர்வே லரசே கவின்தருசீர்த்
திலகம் தருவா ணுதற் பரையின்
செல்வப் புதல்வா திறதனால்
இலகுங் கலப மயிற் பரிமேல்
ஏறும் பரிசென் நியம்புகவே



உலக மெங்கெங்கினும் பரவி நிற்கும் பரம்ஜோதி யுருவான
குருவே, நம் மனத்தே வாழும் துருக்குணங்களாகிய அசுரர்களை
வேலால் அழிக்கும் சண்முக ஒளியே, அழகான திலகமென இரு
கண் உள் ஒளிர்ஒளியே நெற்றிக்கு உள்ளே விளங்கும் சோதியே!
சக்தியின் புதல்வனே! தவம் மேலோங்கிய நிலையில் முதலில்
ஊர்ந்து செல்லும் மயில் பின் குதிரை போல் வேகமாக உள்
ஓடிடும் திறத்தை என் சொல்வேன் என்கிறார் வள்ளலார்?

அடியார்க்கு கடிமையாக்குகவே - பாடல் 3
இறைவா உன் திருவடி அறிந்து உணர்ந்து தவம் செய்யும் மெய்யடியார்க்கு
நான் அடிமையாவது என் பெரும் பாக்கியமே! அருள்புரி தணிகை பெருமானே.

சடமான மலத்தால் வருந்தாப் பெருவாழ்வால் மகிழ்வேன். பாடல் 7
நமது உடலே மும்மலங்கலால் ஆனது. உண்டதெல்லாம் மலமே
இந்த மலமான உடலால் வருந்தாமல், என் கண்மணி ஒளியை
பெருக்கி மலத்தை அகற்றி இவ்வுடலை தூய ஒளியுடலாக்கி வாழ்வேன்
மகிழ்வேன் என்கிறார் வள்ளலார்!

சீறும் பிணியும் கொடுங்கோளும் தீயவினையும் செறியவே - பாடல் 10
கொடிய நோய்கள் நவகோள்களால் வரும் துன்பங்கள் நாம் செய்த வினையால் உறும் கஷ்டங்கள் யாவும், ஆறுமுகமான ஒளிக்கடவுளை - நம் கண்மணி ஒளியை  நாம் பற்றினால் இல்லாது  போதும்!

அதன் பின் பரந்த இவ்வுலகில்  எருமைவாகன எமன் அதிகாரம் செல்லாது
போய்விடும்! மரணம் மரணமடைந்து விடும்.

44 செல்வச் சீர்த்தி மாலை


அடியார்க் கெளியர் எனும்முக்கன்
ஐயர் தமக்கும் உலகீன்ற
அம்மை தனக்கும் திருவாய்முத்
தளித்துக் களிக்கும் அருமருந்தே
கடியார் கடப்ப மலர்மலர்ந்த
கருணைப் பொருப்பே கற்பகமே
கண்ணுள் மணியே அன்பர்மனக்
கமலம் விரிக்கும் கதிரொளியே
படியார் வளிவான் தீமுதல்ஐம்
பகுதி யாய பரம்பொருளே
பகர்தற் கரிய மெய்ஞ்ஞானப்
பாகே அசுரப் படைமுழுதும்
தடிவாய் என்னச் சுரர்வேண்டத்
தடிந்த வேற்கைத் தனிமுதலே
தணிகா சலமாம் தலத்தமர்ந்த
சைவ மணியே சண்முகனே.


சைவத்துக்கும் சக்திக்கும் பிறந்த அருமருந்தே! வலது கண்ணாகிய
சிவமும் இடது கண்ணாகிய சக்தியும் சேர்ந்தால் நமக்கு முன்
ஆறுமுக ஒளிக்கடவுள் - நம் இருகண்ணும் தோன்றும்! கண்மலர்
மலர்வதால் கருணை பிறக்கும். கண்ணுள் மணியே சாதனை செய்பவர்
கண்மறைப்பை விரித்து இல்லாதாக்கும் உள் ஒளியே! ஐம்பூதங்களாலான
பரம்பொருளே! சொல்ல முடியாத அளவு பேரின்பம் தரும் மெய்ஞ்ஞானப்பாகே!  நம் உள்ளத்தில் குடி கொண்டிருக்கும் அசுரர் அனைவரையும் வேலால்  முக்கண் ஒளியால் கொன்ற தணிகை யமர்ந்த மனதுக்கு இசைந்த நிலையில் அருள்பவனே ஆறுமுக ஒளிக்கடவுளே.

ஓயாதுயிருக்குள் ளொளித் தெவையும் உணர்த்தி தெய்வப்பதியே
முதற்கதியே திருச்செந்தூரிற் றிகழ்மதியே - பாடல் 2


எப்போதும் உயிருள் ஒளியாய் ஒளிர்ந்து எல்லாவற்றையும் நமக்கு
உணர்த்துபவனே நம் கண்மணி ஒளியாகும்! தெய்வப்பதியே - நம்
கண்மணி அதுவே முதற்கதி. நாம் அனுபவத்தில் காண்பது. திருச்செந்தூரில்
திகழ் மதியே - திருவாகிய ஒளிக் கண்கள் சிவந்து ஒளிரும் போது திகழும்.
அதுவே செந்தூர் என்றது. மதியே - சந்திரக்கலை.

 சத்தவுலக சராசரமும் தாளிலொடுக்கும் தனிப்பொருளே - பாடல் 4

ஏழு உலகமும் இந்த பிரபஞ்சமெலாம் திருவடியில் - தாளில் ஒடுங்கி நிற்கின்ற தனிப் பெரும்பொருளே கண்மணியே. ஏழு உலகம் - நம் உடலில் உள்ள ஏழு ஆதாரங்களும் - நம் உடலிலுள்ள 72000 நாடி நரம்புகளும் நம் கண்மணி ஒளியில் அடக்கம். கண்மணி ஒளியே அனைத்துக்கும் ஆதாரம்.

சாதல் பிறத்தல் தவிர்த்தருளும் சரணாம்புயனே சத்தியனே தணிகாசலமாம் - பாடல் 5


நம் கண்மணி ஒளியை - சத்தியமான நித்திய வஸ்துவை நம் மனம் தணிந்த நிலையில் அமர்ந்து சரணடைந்தால், அங்கேயே நிலை நின்றால் சாதல் பிறத்தல் கிடையாது.பிறப்பு இறப்பு எனும் சூழலில் இருந்து நம்மை மீட்பது திருவடியில் சரணடையும் நிலை ஒன்றே! தேனும் பாலும் பருகினால் தானே இனிக்கும். பருகாமலே உள்ளத்தில் இனிப்பது திருவடி.

ஞான சர்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை
www.vallalyaar.com

Wednesday 28 December 2016

42 திருவருள் விலாசப்பத்து


ஆறுமுகப் பெருங்கருணை கடலே தெய்வ
யானைமகிழ் மணிக்குன்றே அரசே முக்கட்
பேறுமுகப் பெருஞ்சுடர்க்குட் சுடரே செவ்வேல்
பிடித்தருளும் பெருந்தகையே பிரம ஞானம்
வீறுமுகப் பெருங்குணத்தோர் இதயத் தோங்கும்
விளக்கமே ஆனந்த வெள்ள மேமுன்
தேறுமுகப் பெரியவருட் குருவா யென்னைச்
சிறுகாலை யாட்கொண்ட தேவ தேவே


ஆறுமுகங் கொண்ட கருணைக்க கடலே  தெய்வயானை மகிழும்
கண்மணியே, அரசே, மூன்று கண் உடைய பெருஞ்சுடர்க்குள் ஒளிரும்
சுடரே, வேல்கொண்ட முருகனே, பிரம்மஞான கொண்டோர் இதயத்தில்
- இரு உதயத்தில் ஓங்கும் ஒளியே, ஆனந்தத்தை தருபவனே. என் சிறு
வயதிலே என்னை ஆட்கொண்ட தேவர் தேவனே என வள்ளலார் பாடுகிறார்.

நின்னிருதாள் துணை பிடித்தே வாழ்கிறேன் - பாடல் 3

இறைவா உன் இருதிருவடியே துணை என - அதன் ஒளியை பிடித்தே
வாழ்கிறேன்,

கல்வியெலாங் கற்பித்தாய் நின்பால் நேயம் காண வைத்தாய்
இவ்வுலகம் கானல் - பாடல் 3

இறைவா உன் திருவடிகளை பற்றியதால் நீ எனக்கு எல்லா கல்வியும்
கற்பித்தாய்! உன்மேல் அன்பு கொள்ள வைத்தாய்! இவ்வுலக வாழ்க்கை
கானல் நீர் போன்றது என அறியவைத்தாய்!

கற்றறிந்த மெய்யுணர்ச்சி யுடையோ ருள்ளக் கமலத்தே யோங்கு
பெருங் கடவுளே - பாடல் 7

சாகாக்கல்வி கற்ற - குருமூலம் உபதேசம் பெற்றவர் மெய்யுணர்வு
பெறுவர். அவர்கள் உள்ளமாகிய இருதய கமலத்தில் ஓங்கி ஒளிரும் பெருங்கடவுளே!

என்னிரு கண்மணியே எந்தாய் என்னை ஈன்றானே - பாடல் 10
என் இரு கண்மணி ஒளியே - கண்மணியில் ஒளியாக உயிராக இருப்பதால் -
உயிர்கொடுப்பதால் தாய்! என்னை பெற்றதால் ஈன்றவன் தந்தை! எனக்கு உயிர் கொடுத்து தாய் ஆனவன் பெற்றதால் தந்தையுமானான்! இறைவனே அம்மை அப்பன்! உலகில் நமக்கு உடலைத் தந்தது தாய் தந்தை என இருவர்! உயிர் தந்தது தாயுமானவன்!  இறைவன்!

Monday 26 December 2016

41 பவனிச் செருக்கு


பூவுண்டவெள் விடையேறிய புனிதன்தரு மகனார்
பாவுண்டதோ ரமுதன்னவர் பசுமாமயில் மேல்வந்
தாவுண்டன ரெனதின்னலம் அறியாரென விருந்தால்
நாவுண்டவர் திருமுன்பிது  நலமன்றுக் கெனவே
பூ- உண்ட கண்மலர் உள் உள்ள சிவம் வெள்ளை ஒளியாகிய
நம் தீயின் மேலேறி வரும் செந்தீயே! செந்தீயின் சிவனின்
மகன் ஆறுமுகன் நம் கண்மணி ஒளி! நாம் தவம் செய்து கிட்டும்
அமுதம் அகத்தே கொண்ட பச்சை ஒளியின் மேலமர் செவ்வேள் -
செம்மை ஒளி. நாம் தவம் செய்து - கண்மணி ஒளியை நினைந்து
கண் திறந்த நிலையில் உணர்ந்து நெகிழ்ந்தால் இவ்வனுபவம்
காணலாம்!

பசுமயில் மேல் நின்றார் - அது கண்டேன் கலை நில்லாது
கழன்றது - பாடல் 2

பச்சை நிற ஒளிமேல் செவ்வேள் சிவந்த ஒளியான முருகனை
கண்டதும் கண் ஒளி கலை பிரிந்து உள் சென்றது! அதாவது
முருகனை கண்கொட்டாது பார்த்து கொண்டே இருந்தால்
இங்ஙனம் ஒவ்வொரு கலையாக ஒளி பிரிந்து அடுத்த
கலையுடன் சேர்ந்து முடிவில் அக்னி கலையுடன் சேரும்.
மூன்று கலையும் சேர்வதே முழுமையாக சேர்ந்தால்
காணலாம் வேலை! முக்கண்ணை! முச்சுடரை! இதுவே
ஞான நிலை!

மயிலின் மிசை நின்றாரது கண்டேன் நீரார் விழி யிமைநீங்கின
-பாடல் 3


பச்சை மயில் ஏறிவந்த முருகனை கண்டதும் நீர் செரிந்தபடி
இருந்த என் கண்கள் நிலைத்து இமையாமல் நின்று விட்டது.

ஒன்றோடி ரண்டெனும் கண்ணினர் திருமகனார் என்றோடி - பாடல் 4

நாம் கண்மணி ஒளியை நினைந்து உணர்ந்து தவம் செய்யும் போது
இடது கண்ணில் ஆரம்பித்து அங்கிருந்து வலது கண் சூரியனில் வந்து நிற்கும்.

மேல்கலை நீங்கின முலைவீங்கின களிஓங்கின  - பாடல் 5

கண்மணி ஒளியை, கண்ணை திறந்து இருந்து தவம் செய்யும் போது
இடது கண் சந்திரனில் இருந்து சூரிய கலைகள்  சூரிய கலைகள்  - வலது
கண்ணிலுள்ளது அனைத்தும் வந்த பின் அதற்கு மேல் உள்ள கலைகள்
- ஒலிக்கலைகள் நீங்கி அக்னிகலையை சென்றடையும்.

சக்தியாம் சந்திரனை செங்கதிரோன் ஊடுருவில்
முக்திக்கு மூலம் அது - அவ்வைக்குறள்

அப்போது முலை வீங்கியது. இங்கு முலை எனச் சொன்னது பெண்ணின்
மார்பை அல்ல! கண்ணைத்தான் பெண் மார்பு போல கண் இருப்பதால்
கண்ணைத்தான் முலை என்றனர்! அதாவது நாம் தொடர்ந்து கண்ணை
திறந்து தவம் செய்து செய்தால் உள் ஒளி பெருகி உள் ஓடும். ஒளி
உணர்வால் பெருகுவதால் சற்று வீங்கும் கண்! இது தியான அனுபவம்!
அந்த நிலை மிகவும் ஆனந்த பரவசமான நிலையே! இதைத்தான் வள்ளலார்
சொன்னார்.

Saturday 24 December 2016

40 ஏத்தாப் பிறவி யிழிவு



கல்லை யொத்தவன் நெஞ்சினை யுருக்கேன்
கடவுனின்னடி கண்டிட விழையேன்
அல்லை யொத்தகோ தையர்க்குளங் குழைவேன்
அன்பி லாரொடு மமர்ந்தவ முலழ்வேன்
தில்லை யப்பனென் றுலகெடுத் தேத்தும்
சிவபி ரான்றரும் செல்வ நின் றணிகை
எல்லை யுற்றுனை யேத்திநின் றாடேன்
என் செய் வான்பிறந் தேன் எளியனே


நெஞ்சக் கனகல்லும் நெகிழ்த்துருக என அப்பர் சுவாமிகள் பாடுகிறார்.
வள்ளல்ப்பெருமானும் கல்லான நம் நெஞ்சம் உருக வேண்டும் என்கிறார்!
இறைவன் திருவடி காண முயற்சி செய்ய வேண்டும்! அன்பிலாதவர்கள்
இருள்நெறி சேர்க்கும் மாய வலையில் தள்ளுபவரோடு சேரகக்கூடாது.
தில்லையப்பன் சிவன் மகன் தணிகை சென்று அறிந்து உணர்ந்தால்
- கண்மணி ஒளியை சரணடைந்தால் கிட்டும் வீடுபேறு!



 

39 நாள் எண்ணி வருந்தல்


இன்னும் எத்தனை நாள்செலும் ஏழையேன்
இடர்க்கடல் விடுத்தேற
மின்னும் வேற்படை மிளிர்தரும் கைத்தல
வித்தக பெருமானே
துன்னு நற்றணி காசலத் தமர்ந்தருள்
தோன்றலே மயிலேறி
மன்னு முத்தம வள்ளலே  நின்றிரு
மனக்கருத் தறியேனே

கைத்தல வித்தக பெருமானே - என் கைத்தலம் கண்மணி
அதனுள் இருக்கும் வித்தக பெருமான் ஒளியான ஆறுமுகம்.
இந்த கைத்தலம் பற்றினால் தான் முக்கண்ணும் முக்கலையும்
சேரும் வேல் கிடைக்கும். ஒளிக்கடவுளே இன்னும் எத்தனை
நாள் இவ்வுலக மாயையில் சிக்கித்துன்புற வேண்டுமோ!
என் மனம் தணிந்த நிலையில் விளங்கும் இடம் அமர்ந்த முருகா!
பலவர்ண ஒளியாக வந்து காட்சி தருபவனே காத்தருள்வாய்!

தணிகை வாழ் சுத்த சின்மயத்தேவே - பாடல் 2

கண்மணி ஒளி வெளிப்படுவது நம் வினை தீர்ந்து சுத்தமாகும்போது
சின்மயமான கண்மணியில் இருக்கும் தெய்வமே.

ஊழை நீக்கி நல்லருள் தருந்தெய்வமே -பாடல் 3

நமது ஊழ்வினைகள் நீங்க வேண்டுமாயின் தணிகையில் அமர்ந்த
ஜோதிஸ்வரூபமான சண்முகனை தரிசிக்க வேண்டும்.அக்கண்மணி
அருளால் வினை தீரும்.

என் ஆவியே எனை யாள் குருவடிவமே - பாடல் 5

நம் ஆவியே கண்மணி ஒளியாக நம்மை ஆட்டுவிக்கும் நம்
குருவும் தணிகை தெய்வமே!

Thursday 22 December 2016

38 தரிசன வேட்கை


வேல்கொளும் கமலக் கையனை எனையாள்
மெய்யனை ஐயனை யுலக
மால்கொளும் மனத்தர்  அறிவுரு மருந்தை
மாணிக்க மணியினை மயில்மேல்
கால்கொளும் குகனை எந்தையை யெனது
கருத்தனை அயனரி யரியாச்
சால்கொளும் கடவுள் தனியருள் மகனைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே


என்னை ஆண்டு கொண்டிருக்கும் மெய்ப்பொருளே, தாமரை
கையில் வேல் ஏந்தியவனே தலைவனே, உன்னை உலக
மாயையில்  சிக்கிய மனமுடையார் அறியமாட்டார். உலக
மாயை மயக்கம் தீர ஒரே மருந்து உன் திருவடியை பற்றி
நிற்பது தான்! மாணிக்கம் போல் ஒளிவிடும் கண்மணியில்
பலவர்ண ஒளிக்கு மேலாக ஒளிர்பவனே! கண்மணி குகையில்
உள்ளவனே என் தந்தையே என் கருத்தாக இருப்பவனே
பிரம்மாவும் விஷ்ணுவும் அடிமுடி தேடியும் அறிய முடியாத
சிவ மைந்தனே என் குறை தணியும் கண்மணியில் உனை
கண்டு வாழத்துவேன்!

 தண்ணனை யெனது கண்ணனை யெனது தணிகையிற் கண்டு - பாடல் 2


குளிரிச்சி பொருந்திய எனது கண்ணின் மணியின் ஒளியை எனது மனம்
தணிந்த நிலையில் கண்டு வணங்குவேன்!

என்னுடைய யியுரை யான்பெறும் பேற்றை என்னுடைப்
பொருளினை யெளியேன் என்னுடைய குருவின் வடிவினை
யென்கண் மணியினை - பாடல் 3

என்னுடைய உயிராக இருப்பவனும் நான் பெறும் பெரும்
பேறானவனும் என்னுடைய மெய்ப்பொருளாக விளங்குபவனும்
என் குருவாக வந்து வழிகாட்டுபவனுமான என் கண்மணி ஒளியே!

அழகனை செந்திலப்பனை மலைதோறாடல் வாழ்
அண்ணலை - பிணிக்கோர் காலனை - பாடல் 8


அழகான கண்ணே, சிவந்த கண்களில் இருக்கும் - துலங்கும்
அப்பன் - என் தந்தையே - செந்திலப்பன்! மலை தோறாடல் வாழ்
அண்ணலை. எங்கெலாம் மலை இருக்கிறதோ அதிலெல்லாம்
முருகன் இருப்பான். நம் கண்மலையே முருகன் வாழும் இடம்.
எல்லோர் கண்களிலும் முருகன் தோன்றுவான்! பிணிக்கோர்
காலண் - நம் பிறவிப்பிணியை ஒழிக்கும் எமன் நம் கண்மணி
ஒளியான முருகனே!


முத்திக் கொருவித்தை துரியனை துரியமும் கடந்த சத்தனை - பாடல் 9
நாம் முத்தியடைய வித்தாக இருப்பது நம் கண்மணி ஒளியே. அது துரிய
நிலையில் கைகூடும். துரியாதீத நிலையில் தசவித நாதமும் கேட்கும்.

வினையை தள்ளவந்தருள் செய்திடுந்தயாநிதி - பாடல் 10
நம் இருவினைகளை நீக்கி நம்மை தூய்மையாக்கி முக்தி தந்தருளும்
தயாநிதி சண்முகக் கடவுளே நமகண்மணி ஒளியே!

Wednesday 7 December 2016

37 கூடல் விழைதல்



சகமா றுடையார் அடையார் நெறியார்
சடையார் விடையார் தனியானார்
உகமா றுடையார் உமையோர் புடையார்
உதவும் உரிமைத் திருமகனார்
முகமா றுடையார் முகமா றுடையார்
எனவே என் முன் வந்தார்
அகமா ருடையேன் பதியா தென்றேன்
அலைவாய் என்றார் அஃதென்ன


நல்ல நெறியோடு வாழாமல் உலகில் துன்மார்க்கர் மாறுபட்டு
வாழ்பவர் நந்தியில் அமர்ந்த தனித்தன்மை வாய்ந்த சிவத்தை
அடைய முடியாது! எல்லா யூகங்களிலும் என்றும் அழியா ஒரே
அருட்பெருஞ்சோதி ஆண்டவர் சக்தியை இடப்பாகம் கொண்டு
அதால் உலக மக்களுக்கு உதவும் படியாக சண்முகக்கடவுளை
பெற்றவர். சண்முகம் - ஆறுமுகப்பெருமான். முகம் மாறி நம்
இரு கண்களாக நம் முன்  வருவார்! மனம் பேதலித்து நீ யார்
என கேட்டேன் எங்கிருக்கிறாய் என கேட்டேன். அலைவாய் என்றார்
ஆறுமுகப் பெருமான். நம் மனம் அலைபாய்கின்ற வாய் - வாசல்
அதாவது மனம் இருக்கும் மனம் இருக்கும் கண்மணி மத்திய பகுதி
உள் ஒளி.

இறைவன் நம்முள் எப்படி இருக்கிறார் என்பதை ஒவ்வொரு பாடலிலும்
வள்ளல் பெருமான் விதம் விதமாக கூறி அருளியுள்ளார்கள். அருட்பா
முழுவதும் அருள் ஞானமே!

அன்பிற் பேதுறல்



மூடர்கள் தமக்குள் முற்படுங் கொடிய
முறியனேன் தனக்குநின் அடியாம்
ஏடவிழ் கமலத் திருநற வருந்த
என்று கொல் அருள்புரிந் திடுவாய்
ஆடர வணிந்தே அம்பலத் தாடும்
ஐயருக் கொருந்தவப் பேறே
கோடணி தருக்கள் குலவும்நற் றணிகை
குன்றமர்ந் திடுகுணக் குன்றே

இறைவா உன் தாமரை திருவடியில் தோன்றும் அமுதம்
அருந்த அருள் புரிவாயே! அறிவில்லா எனக்கு, பாம்பு மாலை
சூடிய சிவமைந்தன் சிவ சண்முகன் அமர்ந்த தணிகை - கண்மணியை
சார்ந்து இருக்க அருள்புரிவாயே!

கமலம் -தாமரை - தாள் + மறை இறைவன் தாள் ஆகிய திருவடி 
மறைந்து இருக்கிறது அதனால் தான் தாமரை என்றனர்.

Tuesday 6 December 2016

35 நாவளம் படாமை வேண்டல்

குன்றமொத் திலங்கு பணைமுலை நெடுங்கண்
கோதையர் பால்விரைந் தோடிக்
சென்றவிப் புலையேன் மனதினை மீட்டுன்
திருவடிக் காக்கு நாள் உளதோ
என்றனி யுயிரே யென்னுடைப்பொருளே
என்னுளத் தினிதெழும் இன்பே
மன்றலம் பொழில்சூழ் தணிகையாம் பொருப்பில்
வந்தமர்ந் தருள் செயு மணியே

நம் மனமானது இருவினைகளை நிற்கின்றதால் காமம் மோகம்
முதலியவைகளால் எளிதில் கவரப்பட்டு இறைவனை உணர
விடாமல் அலைகழிக்கும். உடல் மீது இச்சை கொண்டு
அலைபவனே புலையன்! புலையன் என்று ஒரு ஜாதி இல்லை!
என் உயிராக என்கண்மணி உள் இருக்கும் ஒளியே !
என்தீய மனத்தை மீட்டு உன் மெய்ப்பொருளில் நிலை நிற்கச்
செய்வாயாக!


மறைக்குளே மறைந்தம் மறைக்கரியதாய
வள்ளலே யுள்ளகப் பொருளே - பாடல் 3

நான்கு வேதங்களிலும் பரிபாசையாக சொல்லப்பட்டது நம் உள்
அகப்பொருள் - ஒளி கண்மணி உள் உள்ள ஒளி!  மறைத்து
சொல்லப்பட்டதால் மெய்ப்பொருளை - இறைவனை மறைத்து
சொல்லப்பட்டதால் வேதங்களை மறை - நான் மறை என்றனர்.
வேதங்களில் சொல்லப்பட்டதாயினும் வேதங்களை ஓதுபவர்
அறியமாட்டார்கள். ஏனெனில் வெளிப்படையாக சொல்லாதது தான்
காரணம்! எப்படி எனில் கண்தானே பார்த்து படிக்கிறது! கண்ணில்தான்,
கண்மணியில் தான், கண்மணியின் உள் உள்ள ஒளிதான் நம்மை
காக்கும் இறைவன் நம் உயிராக துலங்கும் இறைவன் என்பது
தெரியாதல்லவா ?!  அதுபோலத்தான்! இதை அறிந்தவன்
சொன்னால்தான் அறியமுடியும்! அப்படித்தான், அறிந்தவன்
மூலம் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்
பரிபாசையாக சொன்னார்கள் ஞானிகள்! அறிந்து சொல்பவன் குரு!
தெரிந்து கொள்ள வருபவன் சீடன்! கண்ணால் எல்லாம் பார்க்கிறோம்.
கண்ணை பார்க்க முடியுமா? தவத்தில் தான் நம் கண்ணை நம் கண்மணி
ஒளியை நம் உயிரான இறைவனை காண முடியும்! கண்ணை திறந்தால்
தான் உன் உள் ஒளியை காணலாம்! திறப்பவர் தான் குரு! தகுந்த ஆச்சாரியன்
மூலம் தங்கள் நடுக்கண்ணை திறக்கப்பெற்று கொள்வது நலம்" என வள்ளல் பெருமான் vஉபதேசித்துள்ளார்!