Saturday 24 September 2016

போக்குரையீடு



கற்கி லெனுள தருட்பெய ராம்குக
கந்தாஎன் பவைநாளும்
நிற்கி லேனுன தாகம நெறிதனில்
நீசனேன் உய்வேனோ
சொற்கி லேசமி லடியவர் அன்பினுள்
தோய்தரு பசுந்தேனே
அற்கி லேர்தருந் தணிகையா ரமுதே
ஆனந்த அருட்குன்றே


தணிகை மலை அமுதமே - கண்மணி ஒளியே ஆனந்தம் தரும்
அமுதே - அருள் பொழியும் இறைவா உன் நாமம் சொல்லாத என்வாழ்வு
என்னாகுமோ, உன் ஆகம நெறிவாழாத என் நிலை என்னாகுமோ
அப்பழுக்கில்லாத அடியார் அன்பில் தோய்ந்த இனிமையானவனே
காப்பாய்.

ஆவியே அருளமுதே - பாடல் 3
என் ஆவியாக இருக்கும் இறைவா! குறையாத அருள் மழை பொழியும்
அமுதமே.

பொன் செய்க்குன்றமே பூரண ஞானமே
புராதன பொருள் வைப்பே
மன்செய் மாணிக்க விளக்கமே - பாடல் 5

தகதகக்கும் தங்க ஜோதிமாலையே! பூரண ஞானம் தரும் கண்மணி ஒளியே !
புராதன பொருள் - மிக மிக பழமையான தோற்றம் அறிய முடியாத  காலத்திற்
முற்பட்ட ஒளியை வைத்துள்ள  கண்மணியே! ஒளி விட்டு பிரகாசிக்கும்
மாணிக்கமே கண் மணி ஒளி  - அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

கண்ணி னண்ணருங் காட்சியே நின் திருக்
கடைக் காணோக் கருணோக்கி
எண்ணி எண்ணி நெஞ்சழிந்து  கண்ணீர் கொளும் - பாடல் 6

கண்ணினால் காண்பதற்கு அருமையான காட்சியே!
அருட்பெருஞ்சோதி ஆண்டவரே உன் திருகடை கண்ணால் அடியேனை
கண்டு அருள் பாலிக்க கூடாதா? என்றும் எண்ணி எண்ணி நெஞ்சம் உருகி
கண்ணீர் பெருக்கெடுத்து வழிய தவம் செயும் எனக்கு அருளிசெய்!

No comments:

Post a Comment