Sunday 1 September 2019

59. திருக்காட்சிக்கு இரங்கல்


மண்ணேயும் வாழ்க்கையிடை மாழாந்து வன்பிணியால் 
புண்ணேயும் நெஞ்சம் புழுங்கின்ற பொய்யவனேன் 
பண்ணேயும் இன்பப்  பரஞ்சுடரே என் இரண்டு 
கண்ணே உன் புன்முகத்தைக் காணக் கிடைத்திலனே 

உலக வாழ்க்கையில், மாயையில் சிக்கி சீரழிந்து தீராத
நோயால் துன்புற்று புண்பட்டு வேதனையால் துயரப்படுவர் முடிவில்
மண்ணில் தான் போய் சேருவர். இதிலிருந்து விடுபட நம் இரண்டு
கண்ணில் துலங்கும் ஒளியை இறைவனின் பொன் முகத்தை தவம் செய்து
காண வேண்டும். காணலாம்! ஒளியைக்கண்டவர் தசவித நாதத்தை
கேட்பர்! இன்பத்தை - பேரின்பத்தை தரும் பரஞ்சுடர் - பரமாத்மா
நம் இரண்டு கண்களிலும் உள்ளார்!


அருள் ஆர்ந்த முக்கண் அழகுதனைக் கண்டிலேனே - பாடல் 2

நம் இரு கண்ணில்  துலங்கும் ஒளியை எண்ணி உணர்ந்து தவம் செய்தால்
உள்ளே உள்ளே அக்னிகலை உணர்வு பெறும் -ஒளி பெருகும் - துலங்கும்.
அதுவே மூன்றாவது கண்!? அருள்மயனான முக்கண் சிவம் பெற்ற பிள்ளையல்லவா நாம்!?
நமக்கும் மூன்று கண்தான் ! தெரிகின்ற இருகண் ஒளியை பெருக்கினால்  - தவத்தால்
மூன்றாவது கண் துலங்கும்!?

தாயுமானவனே எந் தந்தையே அன்பர்தமைச் சேயாய் வளர்க்கும் சிவனே - பாடல் 4

இறைவனே நமக்கு உயிர் தந்தவன் ஆதலால் தாய்!  நம்மை வளர்த்து கருவிலே 
உருவாக்குபவர் அதனால் தந்தை! தாயும் அவனே! தந்தையும் அவனே! அதனால் 
தான் ஞானியர் இறைவனை அம்மையப்பன் என்றழைத்தனர்.

யார் அவனை - சிவனை உணர்ந்து சரணடைகிறார்களோ அவர்களை சேயாய் பிள்ளையை போல் 
போற்றி பாதுகாத்து வளர்த்து ஆளாக்குவான்! 

உடலை தந்த தாய் தந்தையரும் அழிந்து விடுவர்! நம் உடலும் அழிந்து விடும்! இறைவனை உயிர் தந்த அம்மையப்பனை சரணடைந்தால் உடல் அழியாது! உயிரின் ஆற்றலை ஒளித்தன்மையை உடல் பெறும்!?இதைத்தான் வள்ளல் பெருமான் உரைக்கின்றார்.

உயிர் தந்த தாயும் தந்தையும் குருவுமான இறைவனை அருட்பெருஞ்ஜோதியை உணர்பவனே முக்தியடைகிறான்!மரணமிலாபெருவாழ்வு பெறுகிறான்!ஞானியாகிறான்! சித்தனாகிறான்!

கண்ணும் கருத்தும் களிக்கவரும் கற்பகமே - பாடல் 6 

இறைவன் தான் கற்பகம்! எல்லாம் தரும் பரம்பொருள்! அருள்மழை பொழியும் அருட்பெருஞ்சோதி! அவனை நினைத்து தவம் செய்தால் நம் கண்கள் கழிப்படையும் வண்ணம், ஆனந்த பரவச நிலை, பேரின்பம் கிட்டும். எண்ணமெல்லாம் அந்த சிவமே ஒளியே துலங்குவதால் கருத்தில் வேறு ஒன்றுமில்லாமல் அதிலும் பரவச நிலை கூடும்! சிந்தனை பார்வை எல்லாமே ஒளிமயமாகும்! பார்க்குமிடமெங்கும் நீக்கமற எங்கும் ஒளி வெள்ளமாக - பரம்பொருளாக காணலாம்! மகிழலாம்! 

முக்திக்குவித்தே நின் பொன்னடிக்கீழ் மேவிநிற்க - பாடல் 9

உலக மாயையில் மயங்காமல், இறைவா உன் பொற்பாதம் சரணடைவதே என
யார் தம் மெய்ப்பொருளில் - தன் கண்மணியான ஒளியான - இறைவன் திருவடி 
நிழலில் தாங்குகின்றனரோ அவரே முக்தி அடைவர்! இறைவன் திருவடியாகிய தம் 
கண்மணி ஒளியில் யார் சரண் புகுகின்றார்களோ! அவரே புத்திசாலி!? இதுவே 
முக்திக்கு வழி ! முக்திக்கு வித்து! இறைவன் பொன்னடி! நம் கண்மணி!  


ஞான சற்குரு சிவசெல்வராஜ் 
www.vallalyaar.com