Sunday 4 September 2016

திருத்தணிகை பிரார்த்தனை மாலை - 1


சீர்கொண்ட தெய்வ வதனங்க ளாறும் திகழ்கடப்பந்
தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களுமோர்
கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியுமருட்
கார்கண்ட வன்மைத் தணிகாசலமு மென் கண்ணுற்றதே

Image result for vallalar muruga
இராமலிங்க சுவாமிகள் 9 வயது பாலகனாக இருந்த போது
தன் வீட்டில் ஒரு கண்ணாடியும் அதன் முன் விளக்கும் ஏற்றி
வைத்து அதன் முன் அமர்ந்து கண் திறந்து பார்த்திருந்து
பார்த்திருந்து தியானம் செய்தபோது கிடைத்த அனுபவமே
இப்பாடல். யார் தியானம் செய்தாலும் கிடைக்கும் முதல் அனுபவம்
இதுதான். கண்ணாடியில் நம் உருவம் தெரியும். நம் கண்ணில் விளக்கின்
ஜோதி பிரதிபலிக்கும். இப்படியே பார்த்து பார்த்து இருக்க இருக்க
நம் உருவம் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்! நம் இரு கண்மட்டும்
தெரியும். கண்மணி ஒளி தெரியும். இதை விவரித்துத்தான் வள்ளலார் பாடினார் இப்பட்டை! சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறு- சீர் இறைவன் நமக்கு கொடுத்த சீர் ஒளி - உயிர். அந்த ஒளியை கொண்ட இரு மூன்று
வட்டம் கொண்ட இரு கண்களே ஆறுமுகம் என்றார். முகத்து முகம் கண்!

பண்ணிரு தோள் - பன்னிரு கலையுடைய வலக்கண் தாமரைதான் - தாமரை
போன்ற திருவடி - இருகண். வேல் மூன்று ஜோதி சேர்ந்த நிலை. மயில் பலவர்ண ஒளி.

கோழி - ஒலியை குறிக்கும். கார் கொண்ட - மழை போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், தணிகாசலம் - நம்
காமகுரோதாதிகள் எல்லாம் தணிந்தபோது, முருகன் - ஒளி என் கண்ணுற்றதே -
என் கண்ணில் தெரிகிறது. பாலகனாயிருந்த போதே வள்ளலார் மாபெரும் ஞான அனுபவ நிலை எய்தினார்.


ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பா மாலை

- தொடரும்

No comments:

Post a Comment