Tuesday 13 September 2016

ஆற்றா முறை


விண்ணறாது வாழ் வேந்த னாதியர்
வேண்டி யேங்கவும் விட்டென்  னெஞ்சகக் 
கண்ணறாது நீ கலந்து நிற்பதைக்
கள்ள நாயினேன் கண்டு கொண்டிலேன்
எண்ணறாத்  துயர்க் கடலுண் மூழ்கியே
இயங்கி மாழ்குவேன் யாது சேகுவேன்
தண்ணறாப் பொழில் குலவும் போரிவாழ்
சாமியே திருத்தணிகை நாதனே


விண்ணக வேந்தன் இந்திரன் மற்றும் தேவர்களும் வேண்டி
நிற்கும் தணிகை நாதனே குளிர்ச்சி பொருந்திய சோலை
சூழ் ஊரில் வாழும் சாமியே என்னுள் நீ இருப்பதை
அறியாமல் வினையால் துன்பத்தில் மூழ்கினேன் என் செய்வேன்!

இறைவன், என் நெஞ்சகக் கண்ணறாது கலந்து நிற்கிறான் என வள்ளலார்
கூறுகிறார். ஒளியாக இறைவன் நம் இரு கண்மணி உள்ளில் கலந்து
நிற்கிறான். நெஞ்சகக்கண் என்கிறார் வள்ளல் பெருமான். நெஞ்சு என்றால்
மார்பு என்று பொருள். இங்கே அதுவல்ல - நெஞ்சகக் கண் - நெஞ்சு + அகம் + கண். நெஞ்சு என்றால் அஞ்சும் சேர்ந்தது. பஞ்சபூதம் ஐந்தும் ஒன்று சேர்ந்து இருக்கும் இடைமே நெஞ்சு. நமது கண்ணில் தான் 5 பூதங்களின் அம்சமும் உள்ளது. கண் தான் நெஞ்சு!அதன் அகத்திலே இருக்கும் ஒளியே பரவெளியில் துலங்கும் பரவொளி அம்சம். இறைவா என் கண்ணில் நீ கலந்து நிற்கிறாய்!

கண்ணினுள் மணியாக நின்றனை - பாடல் 3

இறைவன் - அருட்பெருஞ்ஜோதி ஆண்டவன் கண்ணினுள் மணியாக நிற்கிறான்.

இன்பவான் சோதியே யருள் தோற்றமே
சுக சொருப வள்ளலே  - பாடல் 6


நம் கண்மணியின் மத்தியுனுள் உள்ள ஒளி நமக்கு பேரின்பம் நல்கக்கூடிய
வான்சோதி , விண்ணுள் நிறைந்த அருட்பெருஞ்ஜோதியே! சாட்சாத் இறைவனின் அருள் தோற்றமே நம் கண்மணி ஒளி. அதுவே நாடுபவர்க்கு சுகத்தை தரும் உருவான ஜோதி. ஜோதி தங்கிய வள்ளலாகிய இறைவனின் சொரூபம். கண்மணியே இறைவனின் உருவம்.

நீயும் நானுமோர் பாலு நீருமாய் நிற்க - பாடல் 8

இறைவன் நம் உடலிலே கண்ணில் மணியில் ஒளியாக இருக்கிறான், நாம் அந்த ஒளியோடு ஐக்கியமாக வேண்டும். எப்படி? பாலும் நீரும் போல இரண்டற காலத்தல் வேண்டும். அதுவே உத்தம தவசீலர் இயல்பு.

மெய்யருளுள்ளே விளங்கும் சோதியே
வித்தில்லா வான் விளைந்த வின்பமே - பாடல் 9

மெய்யருள் உள்ளே - மெய் அருள் - உள்ளே தான் உள்ளது .
நாம் பெற வேண்டிய உண்மையான இறையருள் நம் உள்ளே -
கண்மணி உள்ளே தான் உள்ளது .நாம் பெற வேண்டிய உண்மையான
இறை அருள் நம் உள்ளே - கண்மணி உள்ளே தான் உள்ளது. அங்கே
சோதியாக விளங்குகிறான், அந்த பேரின்பம் நல்கும் சோதி புதிதாக
முளைத்த ஒன்றல்ல! வான்வெளியிலே ஆகாயத்திலே பேரொளியானா
அருட்பெருஞ்ஜோதியின் அம்சமே.

பாலீரென நின்னடி க்கணே  பற்றி
வாழ்ந்திடபி பண்ணுவாய் - பாடல் 10.

பாலில் கலந்த நீர் போல உன் திருவடியாக என் கண்ணை பற்றி
வாழ்ந்திட  அருள் செய்வாய்.

ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும்

No comments:

Post a Comment