Friday 23 September 2016

வேட்கை விண்ணப்பம்


மன்னே யென்ற னுயிர்க்குயிரே
மணியே  தணிகை மலைமருந்தே
அன்னே என்னை யாட்கொண்ட
அரசே தணிகை யையாவே
பொன்னே ஞானப் பொங்கொளியே
புனித வருளே புராணமே
என்னே யேளியேன் துயருழத்தல்
எண்ணி யிரங்கா திருப்பதுவே

மன்னவனே என் உயிர்க்கு உயிரான மணியே தணிகை மலையான
கண்மணி ஒளியாகிய மருந்தே என்னை ஆட்கொண்ட இறைவா
ஞானம் தரும் ஒளியே அருள் பூரணமே காத்தருள்.

உருவாய் வந்து தருவாயோ தணிகாசலத்துள் அமர்ந்த ஒருவா - பாடல் 3
தணிகாசலத்துள் - என் கண்மணிக்குள் அமர்ந்த ஒளியான இறைவா -
உருவமாக வந்து எனக்கு அருள் தருக. இறைவன் நம்  இரு கண்ணாகவே
நமக்கு முன் காட்சி தருவான் ஒளிர்வான்.

ஒளியே னெந்தா யென்னுள்ளத்  தொளித்தே யெவையுமுணர்கின்றாய் - பாடல் 10
ஒளியே - என்தாயே - என்னுள்ளத்தில் ஒளித்தே உள்ளம் - கண்மணியின் உள்ளே மறைந்திருக்கின்ற ஒளி . உள் அகம் தான் உள்ளம். கண்மணி நம் கண்மணி உள்  உள்ள ஒளி எல்லாவற்றையும் உணர்கிறது. இறைவன் நம்முள் மறைந்திருக்கின்றான்.அவனை நாம் தியானம் செய்து விடாமுயற்சி செய்து வெளிப்பட வைக்க வேண்டும். அருள்புரிவான் அவனே

No comments:

Post a Comment