Sunday 4 September 2016

திருத்தணிகை பிரார்த்தனை மாலை - 2




கண் மூன்றுறு செங்கரும்பின் முத்தே
பதம் கண்டிவான்  - பாடல் 2

கண் மூன்றில் - உறும். 1 கண் மூன்று வட்டம். வெள்ளை விழி - கருவிழி
- கண்மணி இதுவே கண் மூன்று என்றதாகும். அதில் உறுவது ஒளி. அது
செங்-கரும்-பூ தியானம் செய்ய செய்ய கண் சிவப்பாகும்.

கண்தான் கரும்-பூ என்பது கரும்பு அல்ல. கரும் பூவாகிய கண்ணில் முத்து
போன்ற வெள்ளொளி தோன்றும் அப்போது கண்வெள்விழி சிவப்பாகும்.
அதுதான் அனுபவம். இந்தபடியே காண்பவன் தான் பதம் இருகண்களாகிய
இறைவனின் ஒளி பொருந்திய பாதம் - திருவடி காண்பான்!

மாணித்த ஞான மருந்தே என் கண்ணினுள்
மாமணியே  - பாடல் 3

என்றும் உள்ள நித்தியானந்தம் தரக்கூடிய ஞான மருந்தானே என்
கண்ணுள் இலங்கும் மாமணியே. கண்மணியில் உள்ள ஜோதியே ஞான மருந்து.

தணிகாசலத்திற் பரனே குமார பரமகுருவே குகா
எனக்கூவி நிற்பேன் - பாடல் 7.

தியானம் செய்து செய்து நம் துர்குணங்கள் எல்லாம் தணிந்த நிலையிலே தான் - நாம் தான் தணிகாசலம். அப்போது நம் உள்ளொளி தோன்றும். அது குமரன் இளமையானது. பரம  குரு. நமக்கு நம் உயிரான ஒளி தான் குருவாக இருந்து நம்மை வழி நடத்தி சிவமாகிய பேரொளியிடன் சேர்ப்பிக்கும் குமரனே குமரனே பரமகுரு அவன் இருப்பிடம் நம் இருதய குகை, இரு உதய குகை. இரு கண்மணி உள்ளகும் கையில் இருப்பதால் குகா இதை எல்லோரும் அறிய கூவுவேன்.

தெய்வ மணிச்சுடரே
தணிகை சிவ குருவே  - பாடல் 14

தெய்வம் சுடராக நம் மணியில் கண்மணியில் இருக்கிறது.
தியானம் செய்யச் செய்ய நம் குறையெலாம் தணிந்தாலே
குருவாக நம் உள்ஒளி - முருகன் - சிவத்துக்கே குருவான
ஞான பண்டிதன் வருவான் சிவகுரு.


ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பா மாலை

- தொடரும்

No comments:

Post a Comment