Saturday 17 September 2016

இரந்த விண்ணப்பம் - 1


நாளை யேகியே வணங்குவது மெனத்தினம்
நாளையே கழிக்கின்றோம்
ஊளை நெஞ்சமே என்னையோ என்னையோ
உயர்திருத் தணிகேசன்
தாளை யுன்னியே வாழ்ந்திலம் உயிருடல்
தணந்திடல் தனையிந்த
வேளை யென்றறி வுற்றிலம் என் செய்வோம்
விளம்பரும் விடையோமே

ஒவ்வொரு நாளும் நாளைக்கு போய் இறைவனை வணங்கலாம்
என்று கூறியே நாள் பலவாக கழிக்கின்றோம்!  இந்த உயிர் தாங்கிய உடல்
சில்லென குளிர்ந்து போகும் காலம் என்று?  என யாரும் யாரும் அறிய
மாட்டோமே!

ஊளை நெஞ்சமே - ஊழ் - நாம் செய்த பற்பல பிறவிகளிலும்
செய்த கர்மவினையே ஊழ்வினை!

அது எங்கே இருக்கிறது? ஊளை  நெஞ்சமே - நெஞ்சத்தில் இருக்கிறது.  நெஞ்சுதான் அஞ்சும் சேர்ந்த கண்! கண்மணி மத்தியினுள் ஒளி உள்ளது. உள் உள்ள ஜோதியை மறைத்து கொண்டு இருக்கும் மெல்லிய மறைப்பே - ஜவ்வே - திரையே - ஊழ்!

ஊழ் அகல வேண்டுமாயின் உள்ஜோதி சுடர்விட்டு பிரகாசிக்க வேண்டும்.
தணிகை ஈசன் - கண் மணி திருவடியை பற்றினால் - உள் உள்ள தீ பற்றி
எரிந்தால் ஊழ் இல்லாது மறைந்து விடும். தவம் செய்தால் கிட்டும் பலன்
இது!

ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும்

No comments:

Post a Comment