Monday 12 September 2016

சீவ சாட்சி மாலை - 2

கரும்பினிழிந் தொழுகு மருட்சுவையே முக்கண்
கனிகனிந்த தேனே என் கண்ணே ஞானம் தரும்
புனிதர் புகழ் தணிகை மணியே சீவ சாட்சியே  - பாடல் 4

இனிய நல் கரும்பு சாற்றை விட சுவையான கண்மணி ஒளி
அனுபவமே! முக்கண் கனி கனிந்த தேனே - வலது கண் இடதுகண்
உள்ளே உள்ள அக்னிகலை மூன்றாவது கண். மூன்றும் சேர்ந்து
ஒளிர்ந்தால் மூன்று தீயும் சேர்ந்தால் முத்தி முக்தியின்பம் பேரின்பம்
எல்லாமே என் கண்ணே, ஞானம் தருவது தணிகை மணியே
சீவசாட்சியான கண்மணி ஒளியே.

அன்னை முதலாம் பந்தத் தழுந்தி நாளும் வியிற்றோம்பி
மனமயர்ந்து நாயேன் முன்னைவினையால் படும்பாடெல்லாம் - பாடல் 6

அன்னை முதல் பற்பல உறவுகள் நம்மை சம்சார சாகரத்துள் தள்ளி விடுவர்.
அதனால் உறங்கி களித்தலே வாழ்வு என்றாகி மனம் வெதும்பி துன்பத்தின்
எல்லைக்கே போய் விடுவோம். இவ்வாறு எல்லோரும் அவரவர் செய்த
முன்வினை பயனால் தீராத துன்பம் அடைவர். அதிலிருந்து விடுபட
சீவ சாட்சியாக விளங்கும் தணிகை மணியை, நம் கண்மணியை சார்ந்திருந்தாலே
சிறந்த உபாயம்.

உபாயம் இதுவே மதியாகும் அல்லாதவெலாம் விதியே மதியாய் முடிந்து விடும். தன்னை உணரும் கண்மணி ஒளி தவம் செய்தால் முன்னை வினையை  தீர்க்கலாம். நம் உள்ஒளி வழிகாட்டும் ஒளியூட்டும்.

தன்னார்வத்தமர் தணிகை மணியே   - பாடல் 10

நம் கண்மணி ஒளியே - சீவ சாட்சியாக விளங்கும் தணிகை மணியை நாம்
பெறவேண்டுமாயின் நமக்கு ஆர்வம் விருப்பு - வைராக்கியம் வேண்டும்.
அவரவர் தன்னார்வத்துடன் உழைப்பது தான் தவம். கடும் முயற்சி வேண்டும்.
தீவிர முயற்சி வேண்டும். அப்படி பட்டவர்க்கே தணிகை மணி கைவல்யப்படும்.

ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும்

No comments:

Post a Comment