Saturday 10 September 2016

சீவ சாட்சி மாலை -1


பண்ணேறு மொழி யடியார் பரவி வாழ்த்தும்
பாதமல ரழகின் யிப்பாவி பார்க்கின்
கண்ணேறு படுமென்றோ கனவி லேனும்
காட்டென்றாற் காட்டுகிலாய் கருணை யீதோ
விண்ணேறு மரிமுதலோர்க் கரிய ஞான
விளக்கே யென்கண்ணே மெய் வீட்டின் வித்தே
தண்ணேறு பொழிற் றணிகை மணியே சீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே

இறைவா உன் அடியாரெல்லாம் உன் பாத மலர் அழகினை - தன் கண்மலர்
அழகை பலவாராக போற்றி பாமாலை புனைந்துள்ளனரே! யாவர்க்கும் அரிய
ஞான விளக்கே என் கண்ணே மெய் வீட்டின் வித்தே - என் கண்மணி ஒளியே
சீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே - என் சீவனாகி என்னுள் இருந்து
அருளும் தணிகை மணியே உன்னை சகச நிலையே  அடையும் வழி! என்று
உருகுகிறார் வள்ளல் பெருமான்.

இறைவனை அடைய, சகஜ நிலையே வேண்டும். எப்போதும் சதா சர்வ காலமும்  நம் கண்மணி ஒளியை நினைந்து  நினைந்து உணர்ந்து உணர்ந்து இருத்தலே சாகச நிலை. எத்தொழிலை செய்தாலும் ஏதாவஸ்தை பட்டாலும் முத்தர் மனம் இருக்கும் மோனத்தே.


பிறவிநோய்க்கு மருந்தாய நின்னடியை - பாடல் 3

நாம் எத்தனை பிறவி எடுத்தோமோ தெரியாது. மிகப்பெரிய நோய்
பிறந்து இறந்து பிறந்து இறந்து போவதுதான். இந்த  பிறவிநோயை
விலக்க ஒரே மருந்து நின் திருவடியே இறைவா நீயே உன் திருவடியை
என்னிரு கண்மணியில் ஒளியாக பதித்துள்ளாய் இது தான் பிறவி
பிணிக்கு மருந்து.


ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருவருட்பாமாலை

---தொடரும்

No comments:

Post a Comment