Saturday 7 January 2017

52 தனித்திருத்தொடை



என்னிரு கண்ணின் மேவும்
இலங்கொளி மணியே போற்றி

பன்னிரு படைகொண் டோங்கும்
பன்னிரு கரத்தோய் போற்றி
மின்னிரு நங்கை மாருள்

மேவிய மணாளா போற்றி
நின்னிரு பாதம் போற்றி
நீள்வடி வேல போற்றி

என் இரு கண்களில் இலங்கும் மணி ஒளியே போற்றி!
பன்னிரு கரத்தோய் பன்னிரு கலையுடைய சூரிய கலையே!
வலதும் இடதும் இரு நங்கை வலது கண் இடது கண் உள்
மேவிய முருகா சண்முகா! உன் இருபதாம் திருவடி நீண்ட
வேல்கொண்ட முக்கட்குகனே! மூவிரு முகத்தோனே போற்றி!

செக்கச் சிவந்தே திகழ் ஒருபால் பச்சையதாய் - பாடல் 5
வலப்பக்க ஒளி செக்கச் சிவந்த சிவஒளி. இடப்பக்க ஒளி பச்சை நிற
சக்தி ஒளி.

தாதாதா தாதாதா தாக்குறைக் கென் செய்குதும்யாம்
ஓதாதவமே யழநெஞ்சே - மீதாத்
தாதிதி யென மயிலிற் றானாடி நாளும்
திதிதி தருந் தணிகை தே

தாதாதா தாதாதா தா - ஏழு - தா - எழுதா குறைக்கு என்
செய்வேன். அடியேன் பிறக்கும் போது! வினையால் இறைவனை
அறியாமல் உணராமல் உழலும் நெஞ்சினை உடையவனானேன்!
ஆனால் அருள் கடலான ஒளியான இறைவன் அதிதி போன்று
பலவர்ண ஒளியோடு என் முன் தோன்றினான். அருள் பாலித்தான்!
நமக்கு திதிதி - மூன்று தி   தரும் இறைவன் நம் தணிகையான
கண்மணி ஒளியானவனேயாகும்.

- ஒன்றாம் திருமுறை பூரணம்

ஞான சற்குரு சிவசெல்வராஜ்.
திருஅருட்பாமாலை

No comments:

Post a Comment