Wednesday 25 January 2017

2.6. அச்சத் திரங்கல்


துறையிடும் கங்கைச் செழுஞ்சடைக் கனியே
     சுயம்பிர காசமே அமுதில்
கரையிடும் கண்டத் தொருபெருங் கருணைக்
     கடவுளே கண்ணுதற் கரும்பே
குறையிடும் குணத்தால் கொடியனேன் எனினும்
     கொடுந்துய ரால்அலைந் தையா
முறையிடு கின்றேன் அருள்தரா தென்னை
     மூடன்என் நிகழ்வது முறையோ

         நீர் நிறைந்த இடத்தில் சிவந்த ஒளி கலைகளை கொண்டு தன்னில்தானே
தோன்றி ஒளிர்கின்ற ஒளிகொண்ட கண்ணே - சிவமே! நீயே சுயம் ஜோதி!
நம் கண் மணி மத்தியில் உள்ள துவாரத்தில் உள்ளது இரு வினையாகிய
மறைப்பு அதுவே விஷம் எனப்பட்டது! நாம் பிறரை குறை கூறாது இறைவனிடம் நம்மைப் பற்றி முறையிடுவதே சிறப்பு! ஏன் பிறரை குறைகூறக் கூடாது எனில்,எல்லாவரும் வினை வழியே ஆட்டி வைக்கப்படும் பொம்மைகள்! அறியாமையில் உழலும் மனிதன் குறியுள்ளவனே! அறியாமை நீங்க அறிவு பெருக - துலங்க 'அ ' விலுள்ள ஆண்டவனை - ஒளியை - மெய்ப்பொருளை பற்றுங்கள்!    ஞானம் பேரறிவு கிட்டும்!

பொருள் எலாம் புணர்க்கும் புண்ணியபொருளே - பாடல் 3
 

        இந்த பிரபஞ்சத்திலுள்ள எல்லா பொருட்களிலும் உள்ளிலும் இருப்பவன்
புண்ணிய பொருளான மெய்ப்பொருளான ஒளியே - இறைவன் . அணுவிற்கும்
அணுவானவன்! தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்! அவன் இல்லாத  இடமே இல்லை!

ஆண்டவநின் கருணைக் கடலிடை ஒருசிற் றணுத்துணைத் திவலையே
வேண்டினும் வேண்டாவிடினும் ஆங்களிக்கும் விமலனே - பாடல் 4
      

நாமெல்லாம் , இறைவனாகிய பெருங்கருணை ஒளிக்கடலின் ஒரு சிறு
அணு அளவு ஒளியிலும் ஒரு திவலையே! நம் எல்லோர் உள்ளிலும் ஒளியாக
துலங்கும் அந்த அருட்பெருஞ்சோதியே , வேண்டினவர் வேண்டாதவர் எல்லோருக்கும்

அருள் கொடுக்கின்றது . விருப்பு வெறுப்பு அற்றவன் அல்லவா இறைவன்! நாத்திகம் பேசும் மடையர்களுக்கும் அருள்பவனே கருணைக் கடலான இறைவன். ஏனெனில் எல்லா உயிர்களும் அவன்படைப்பல்லவா? எல்லோரும் அவன் பிள்ளையல்லவா? எவ்வளவுதான் அயோக்கியனானாலும் உலகிலே பெற்றதாய் பிள்ளையை
வெறுக்கமாட்டாள். உலகத்தையே பெற்ற தாயான கடவுளா வெறுப்பார்?! மூடனுக்கும் பஞ்சமா பாதகம் புரிபவனுக்கும் அருள் கொடுத்து வாழவைப்பவனே அருட்பெருஞ்ஜோதியான ஆண்டவன். மூடன்- கவி காளிதாசன் ஆனான்! வேடன் - கண்ணப்பன்ஆனான்! காடன் - வால்
மீகி ஆனான்! நாடன் - அருணகிரிநாதர் ஆனான்! இன்னும் எத்தனையோ பேர் ஏற்றம் பெற்றனரே! எந்தை அருட்பெருஞ்சோதி அருளினாலே!

கருமையிற் பொலியும் விடநிகர்துன்பக் களைகளைந்  தெனை விளைத்தருளே - பாடல் 5

       கருமையிற் பொலியும் - கருமையத்தில் பொலிவுடன் இருக்கும்
- நம் கண்மணி மையத்தினுள் பொலிவுடன் துலங்கும் ஒளி! விடநிகர்
துன்பகளை களைந்து - விஷம் என நம்மிடம் இருப்பது!. நம்கண்மணி
துவாரத்தை அடைத்துகொண்டிருக்கும் வினையாகிய களைகளை
அகற்றவேண்டும்! களை பறித்தால் தானே பயிர் செழித்து வளரும்!
நம் வினையாகிய களை பறிப்பதே நாம் செய்யும் கண்மணி ஒளி
தவமாகும். ஒளிதவம் ஓங்க ஒங்க ஞானபயிர் வளரும். முக்தியடையலாம.



ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருஅருட்பாமாலை

No comments:

Post a Comment