Sunday 15 January 2017

2.4 சிறு விண்ணப்பம்


பண்ணால் உன் அருட்புகழைப் பாடு கின்றார்
பணிகின்றார் நின்அழகைப்  பார்த்துப்  பார்த்துக்
கண்ணார உளங்குளிர்க் களித்தா நந்தக்
கண்ணீர்கொண் டாடுகிறார் கருணை வாழ்வை
எண்ணாநின் றுனை எந்தாய் எந்தாய் எந்தாய்
என்கிறார் நின்அன்பர் எல்லாம் என்றன்
அண்ணாநான் ஒருபாவி வஞ்ச நெஞ்சத்தால்
அலைகிறேன் என் செய்கேன் அந்தோ அந்தோ

இறைவன் அருள்பெற்ற அடியார்கள் திரு அருட்பாக்களை
பாடி ஆடி பணிகின்றனர்! இறைவன் கண்மணியில் ஒளியாக
துலங்கும் அழகை பார்த்து பார்த்து தவம் செய்து கண்ணீர்
அருவியென கொட்ட பேரானந்த பரவசத்தோடு கண்குளிர
காண்கிறார் சிலர்! இறைவா என் கண் மணியிலே ஒளியாக
கருணையோடு கலந்து அருள் புரிகின்றதை உணராமல்
அறியாமல் வெறுமனே எந்தாயே எந்தந்தையே இறைவா என
கதறுகின்றனரே! நம் பாவ வினையால் ஆன நெஞ்சம்
அலையாமல் கண்மணி ஒளியிலே எண்ணியிருக்கச்
செய்வதே உத்தமம்.

நையா நின்றுலைக்கின்ற மனத்தால் - பாடல் 5

நம் மனமே  வினைகளின் இருப்பிடம்! வினைகளை செயலாற்றுவதே
மனதின் வேலை! இந்த பொல்லா மனம் துன்பம் அறியாவிட்டால்
உலக மாயையில் சிக்கி சுகபோகத்தில் உழன்று மேலும் மேலும்
பாவத்தை சேர்க்கும். இந்த மனதை அடி அடி என அடித்து நொறுக்கினால்
- நைய புடைத்தால் தான் புத்தி வரும்! துன்பம் தான் - நாம் செய்த பாவம்
தீர்ந்தால் தான் பேரின்பம் - இறைவனை அடைய பாதை திறக்கும்!
மகாபாரதத்தில் குந்தி தேவி கண்ணனிடம் கேட்ட வரம் "எனக்கு
எப்போதும் துன்பத்தையே கொடு " என்று தானே! அப்போது தானே
சதா காலமும் நாம் கண்ணனை நினைப்போம். அப்போது தானே கருணை
கிட்டும். 


பெண்மையுறும் மனத்தாலே திகைத்தேன் நின்சீர்
பேசுகிலேன் கூசுகிலேன் பேதை - பாடல் 8

நம் மனம் பெண்மை தன்மையுடையது. பேதமை என்பது பெண்ணிற்கணிகலம் ஆதலால் பேதை என்பர். பேதை மனமானது இறைவனின் புருஷோத்தமனின் சீர் ஆகிய கண்மணி ஒளியை அறியாது - உணராது திகைத்து வெட்கப்பட்டு செயல்படாது போகிறது.
ஆத்மாக்களாகிய நாம் பெண்! ஆண்டவனாகிய அருட்பெருஞ்ஜோதியே  ஆண் ! ஆத்மா பரமாத்மா சேர்வதே பேரின்பம்.

No comments:

Post a Comment