Friday 6 January 2017

50 சண்முகர் கொம்மி

குறவர் குடிசை நுழைந்தாண்டி - அந்த
கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி
துறவர் வணங்கும் புகழாண்டி - அவன்
தோற்றத்தை பாடி யடியுங்கடி 


புறத்தே யலையும் நம் மனதை குறவர் குடிசையுள் திருப்ப வேண்டும்.
குறவர் - சிவம் ஒளி என இங்கே பொருள்படும். சிவம் தங்கிய குடிசையினுள்
நாம் உள் புகுவது. அதாவது அகமுகமாக பயிற்சி செய்வது. கோமாட்டி
எச்சில் - கண் உள் புகுந்தால் - சக்தியாகிய இடது கண் உள்புகும் சக்தியாகிய
இடது கண் உள்புகும் போது மீதி 4 கலையை விரும்பினான் என ஞான
அனுபவம். துறவிகள் - மனதில் உள்ள பற்றுதலை துறந்தவர்! உள்ளத்தில்
கண்மணியுனுள் ஒளியை அறிந்து புகழ்ந்து பாடுவர் ஆடுவர், ஆனந்தம் கொள்வர்.

சீர்திகழ்தோகை மயில்மேலே - இளஞ்
செஞ்சுடர் தோன்றும் திறம்போல - பாடல் 5

நம் கண்மணியாகிய  சீரில் திகழ்கின்ற பலவர்ண மயிலான
ஒளி மேலே இளஞ் செஞ்சுடர் தோன்றும் அதுவே நம் ஆத்ம ஜோதி.

சச்சிதானந்த வுருவாண்டி - பர
தற்பரபோகம் தருவாண்டி - பாடல் 10

சத்து சித்து ஆனந்தம் தருபவன் கண்மணி ஒளி. கண்மணியின் ஒளியே
சத்து. அதை பிடித்தால் நமக்கு சித்துக்கள் கிடைக்கும். அதன் பின்னர்
பேரின்பமே பேரானந்தமே! நமக்கு சத்தாக இருந்து சித்தையும் ஆனந்தத்தையும் தருபவன் நம் கண்மணி ஒளி. சச்சிதானந்த உருவம் கண்மணியே. பரமாகிய இறைவனும்
தற்பரமாகிய நாமும் பரமாத்மா சீவாத்மா கூடினால் கிட்டும் ஆனந்தம்
பரமானந்தம் பேரின்பம் கிட்டும்! சிற்பரத்தில் கூடி மகிழலாம்.

இராப்பகல் இல்லா இடத்தாண்டி - பாடல் 14
இரவு இல்லா இடம் பரவெளிதானே. அந்த இடத்தில இருப்பவனே. நம்
கண்மணி ஒளியும் அது போலவே உள்ளது.

ஒன்றிண்டான உளவாண்டி - பாடல் 15
ஒன்றான அக்னி கலை இரண்டாக இரு கண்களிலும் சூரிய சந்திரனான
உள்ளது.




ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருஅருட்பாமாலை

No comments:

Post a Comment