Wednesday 4 January 2017

48 போற்றித் திருவிருத்தம்



கங்கையஞ் சடைசேர் முக்கட்
கரும்பருள் மணியே போற்றி
அங்கையங் கனியே போற்றி
பங்கையன் முதலோர் போற்றும்
பரம்பரஞ் சுடரே போற்றி
சங்கைதீர்த் தருளும் தெய்வச்
சரவண பவனே போற்றி


வற்றாத கங்கையென கண் நீர் பெருகிவரும் ஒளி கலையே
சடை என்பது. சூரிய சந்திர அக்னி என மூன்று கண் பெற்ற -
தோன்ற அருளும் கண்மணியே போற்றி. அ வாகிய கையின்
உள்ள கனி போன்றது கண்மணி ஒளி போற்றி. பங்கயம் என்றால்
தாமரை. தாமரை - தாள் மறை திருவடி மறைந்துள்ள ஒளியே
போற்றி. அந்த ஒளிக்குள் ஒளிரும் பரஞ்சுடரே போற்றி நம் எல்லா
ஐயங்களும் கண்மணி ஒளியால் தீரும்! ஒளியே கண்மணி ஒளியே
போற்றி.

விண்ணுறு சுடரே என்னுள்
விளங்கிய விளக்கே கண்ணுறு மணியே - பாடல் 6

விண்ணில் விளங்கும் சுடரே என்னுள் விளங்கும் ஒளிவிளக்கு
அது கண்ணில் உறும்மணியின் உள் ஒளியே.

துறையெலாம் விளங்கு ஞான சோதியே - பாடல் 7
நம் உள்புகும் வாசல் - நம் உடம்பின் உள் ஒளியை அடைய -
உள்ளே போக வாசல் துறைமுகம் - துறையில் விளங்கும் ஞான
சோதியே, அகத்தியர் "துறையறி விளக்கம்" என 100 பாடல் எழுதி
கண்மணி திறத்தை விளக்கியுள்ளார். வள்ளல் பெருமானும் எல்லா
துறையிலும் விளங்கும் ஞான ஜோதி என எல்லார் கண்ணிலும்
விளங்கும் ஜோதியை கூறியிருக்கிறார். கடலில் இருந்து கப்பல்
துறைமுகம் வந்து தானே நாட்டுக்குள் போக முடியும். அதுபோல்
சம்சார கடலில் தத்தளித்த நாம் துறைமுகம் அறிந்து அங்கே
நங்கூரம் பாய்ச்சி கப்பலை நிறுத்தி பின் நாட்டுக்குள் - கண்மணி
வீட்டுக்குள் புக வேண்டும்.

ஆதி நின்றாள்கள் போற்றி
அனாதி நின்னடிகள் போற்றி

ஆதியும் அனாதியுமான தாள்கள் நம் கண்மணி. இறைவன் திருவடியே.
முதலும் முடிவானவன் அருட்பெருஞ்சோதி ஆண்டவனே



ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருஅருட்பாமலை

No comments:

Post a Comment