Sunday 15 January 2017

2.5 கலி முறையிடு


பொய்விடு  கின்றிலன்  என்றெம்  புண்ணியா
கைவிடு கின்றியோ கடைய  னேன்தனைப்
பைவிடம்  உடையவெம்  பாம்பும் ஏற்றநீ
பெய்விடம் அனையஎன்  பிழைபொ  றுக்கவே

       பொய்விட்டு மெய் கொண்டு  -  மெய்ப்பொருள் தனை உணர்ந்து
தவம் செய்தாலே உய்யலாம் ! அன்றி நாம் செய்வதெலாம் சொல்வதெலாம்
விஷம் போன்று மற்றவர்களுக்கு வேதனை தருமானால் இறையருள் எங்ஙனம் கிட்டும் ?

பைவிடம் உடைய வெம்பாம்பும் ஏற்ற நீ கண்மணி பையுள் விஷம்
நிறைந்த நம்பாவ கர்மவினையை சுமந்து தானே உள்ளே சிவமாகிய ஒளி
உள்ளது ?! பஞ்சமா பாதங்களில் ஒன்று "பொய் " சொல்லுதல்! பொய் சொல்லாமல் சத்தியமாக - உண்மை பேசியே வாழ்ந்த "ஹரிச்சந்திரன் " கதை நாமறிவோமல்லவா ?

ஒருவன் சத்தியம் பேசி வாழ்வானானால் அவனிடம் எல்லா நற்குணங்களும்
வந்து மேன்மையடைவான் ! ஒரு பொய் சொன்னால் அதை மறைக்க இன்னொரு பொய் என அவன் வாழ்க்கையும் பொய்யாகிவிடும் .

       நமது வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஆரம்பித்த தர்மச்சாலைக்கு
சத்திய தர்மச்சாலை எனப்பெயரிட்டார் . ஞான சபைக்கு சத்திய ஞான சபை
என பெயரிட்டார். " சத்திய மேவ ஜெயதே"

        கடவுள்தான் சத்தியம! சத்தியம் தான் கடவுள்! சத்தியமே ஜெய்க்கும்.

No comments:

Post a Comment