Saturday, 7 January 2017

52 தனித்திருத்தொடை



என்னிரு கண்ணின் மேவும்
இலங்கொளி மணியே போற்றி

பன்னிரு படைகொண் டோங்கும்
பன்னிரு கரத்தோய் போற்றி
மின்னிரு நங்கை மாருள்

மேவிய மணாளா போற்றி
நின்னிரு பாதம் போற்றி
நீள்வடி வேல போற்றி

என் இரு கண்களில் இலங்கும் மணி ஒளியே போற்றி!
பன்னிரு கரத்தோய் பன்னிரு கலையுடைய சூரிய கலையே!
வலதும் இடதும் இரு நங்கை வலது கண் இடது கண் உள்
மேவிய முருகா சண்முகா! உன் இருபதாம் திருவடி நீண்ட
வேல்கொண்ட முக்கட்குகனே! மூவிரு முகத்தோனே போற்றி!

செக்கச் சிவந்தே திகழ் ஒருபால் பச்சையதாய் - பாடல் 5
வலப்பக்க ஒளி செக்கச் சிவந்த சிவஒளி. இடப்பக்க ஒளி பச்சை நிற
சக்தி ஒளி.

தாதாதா தாதாதா தாக்குறைக் கென் செய்குதும்யாம்
ஓதாதவமே யழநெஞ்சே - மீதாத்
தாதிதி யென மயிலிற் றானாடி நாளும்
திதிதி தருந் தணிகை தே

தாதாதா தாதாதா தா - ஏழு - தா - எழுதா குறைக்கு என்
செய்வேன். அடியேன் பிறக்கும் போது! வினையால் இறைவனை
அறியாமல் உணராமல் உழலும் நெஞ்சினை உடையவனானேன்!
ஆனால் அருள் கடலான ஒளியான இறைவன் அதிதி போன்று
பலவர்ண ஒளியோடு என் முன் தோன்றினான். அருள் பாலித்தான்!
நமக்கு திதிதி - மூன்று தி   தரும் இறைவன் நம் தணிகையான
கண்மணி ஒளியானவனேயாகும்.

- ஒன்றாம் திருமுறை பூரணம்

ஞான சற்குரு சிவசெல்வராஜ்.
திருஅருட்பாமாலை

Friday, 6 January 2017

51 சண்முகர் வருகை


வாரும் வாரும் தெய்வ வடிவேல் முருகரே
வள்ளி மணாளரே வாரும்
புள்ளி மயிலோரே வாரும்.


வருக வருக தெய்வ வடிவேல் - முச்சுடரும் ஒன்றாக்கி தவம் செய்தால்
வரும் ஒளியே முருகர். அவர் வள்ளியாகிய குறமங்கையாகிய நம்
மணாளர் ஆவர். ஆத்மா வள்ளி இறைவன் - முருகர். அவர் ஒளிக் கடவுள்
பல நிற புள்ளி மயிலில் வருவார் வருக வருக.

கண்நுதல் சேயரே வாரும் - பாடல் 4கண்நுதல் - சிவம் - சேயர் - மகன் முருகன் சிவ சண்முகன்.

என் குரு நாதரே வாரும் - பாடல் 5
 என் இரு கண்மணி ஒளியே, சண்முகமே

50 சண்முகர் கொம்மி

குறவர் குடிசை நுழைந்தாண்டி - அந்த
கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி
துறவர் வணங்கும் புகழாண்டி - அவன்
தோற்றத்தை பாடி யடியுங்கடி 


புறத்தே யலையும் நம் மனதை குறவர் குடிசையுள் திருப்ப வேண்டும்.
குறவர் - சிவம் ஒளி என இங்கே பொருள்படும். சிவம் தங்கிய குடிசையினுள்
நாம் உள் புகுவது. அதாவது அகமுகமாக பயிற்சி செய்வது. கோமாட்டி
எச்சில் - கண் உள் புகுந்தால் - சக்தியாகிய இடது கண் உள்புகும் சக்தியாகிய
இடது கண் உள்புகும் போது மீதி 4 கலையை விரும்பினான் என ஞான
அனுபவம். துறவிகள் - மனதில் உள்ள பற்றுதலை துறந்தவர்! உள்ளத்தில்
கண்மணியுனுள் ஒளியை அறிந்து புகழ்ந்து பாடுவர் ஆடுவர், ஆனந்தம் கொள்வர்.

சீர்திகழ்தோகை மயில்மேலே - இளஞ்
செஞ்சுடர் தோன்றும் திறம்போல - பாடல் 5

நம் கண்மணியாகிய  சீரில் திகழ்கின்ற பலவர்ண மயிலான
ஒளி மேலே இளஞ் செஞ்சுடர் தோன்றும் அதுவே நம் ஆத்ம ஜோதி.

சச்சிதானந்த வுருவாண்டி - பர
தற்பரபோகம் தருவாண்டி - பாடல் 10

சத்து சித்து ஆனந்தம் தருபவன் கண்மணி ஒளி. கண்மணியின் ஒளியே
சத்து. அதை பிடித்தால் நமக்கு சித்துக்கள் கிடைக்கும். அதன் பின்னர்
பேரின்பமே பேரானந்தமே! நமக்கு சத்தாக இருந்து சித்தையும் ஆனந்தத்தையும் தருபவன் நம் கண்மணி ஒளி. சச்சிதானந்த உருவம் கண்மணியே. பரமாகிய இறைவனும்
தற்பரமாகிய நாமும் பரமாத்மா சீவாத்மா கூடினால் கிட்டும் ஆனந்தம்
பரமானந்தம் பேரின்பம் கிட்டும்! சிற்பரத்தில் கூடி மகிழலாம்.

இராப்பகல் இல்லா இடத்தாண்டி - பாடல் 14
இரவு இல்லா இடம் பரவெளிதானே. அந்த இடத்தில இருப்பவனே. நம்
கண்மணி ஒளியும் அது போலவே உள்ளது.

ஒன்றிண்டான உளவாண்டி - பாடல் 15
ஒன்றான அக்னி கலை இரண்டாக இரு கண்களிலும் சூரிய சந்திரனான
உள்ளது.




ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருஅருட்பாமாலை

Thursday, 5 January 2017

49 திருப்பள்ளித்தாமம் தாங்கல்


வெம்பு முயிருக் கோருறவாய்
வேளை நமனும் வருவானேல்
தம்பி தமையன் துணையாமே
தனையர் மனைவி வருவாரோ
உம்பர் பரவும் திருத்தணிகை
உயர்மா மலைமே யிருப்பவர்க்குத்
தும்பக் குடலை யெடுக்காமல்
துக்க வுடலை யெடுத்தேனே

நம் உயிர் பிரிகையில் நம் உடன்பிறப்புகள் பிள்ளைகள்
உறவினர்கள் மனைவி கூட வரமுடியுமா?
வரமாட்டார்கள்! வரமுடியாது! தேவர்கள் போற்றும் திருவாகிய
ஒளிக்கடவுள் தங்கி துலங்கும் தணிகைமலை - நம் கண்மணியில்
நினைவை நிறுத்தி வாழ்ந்தால் முக்தியுண்டு! அந்த தணிகேசனுக்கு
பூக்கூடை - குடலை கண்மலர் தாங்கிய உடலை எடுப்பது மேன்மை,
அது அறியாவிட்டால் துக்கவுட`லாகுமே!

தொல்லைக் குடுப்பத் துயரதனில்
தொலைத்தே னந்தோ காலமெலாம்
அல்ல லகற்றிப் பெரியோரை
யடுத்து மறியே னரும்பாவி
செல்வத் தணிகைத் திருமலைவாழ்
தேவா வுன்றன் சன்னிதிக்கு
வில்வக் குடலை யெடுக்காமல்
வீணுக் குடலை யெடுத்தேனே
என் வாழ்நாளெல்லாம் தொல்லை தரும் குடும்ப வாழ்வே கதி
என வீணாக கழித்துவிட்டேன்! சம்சார சாகரத்திலிருந்து மீள
வழிகாட்டும் பெரியோரை - நல்ல குருவை நாடி உபதேசம்
பெற்று உருப்பட வழியறியாது போய்விட்ட பாவியானேன்!
 எல்லா செல்வத்தையும் தருகின்ற, நம் குற்றம் தணியும்
இடமான கண் மணி ஒளியை அறிந்து, அந்த தணிகேசன்
சன்னிதிக்கு கண்மலராகிய வில்வகூடையை சுமக்காமல்
- அறியாமல் வீணுக்கு இந்த உடலை எடுத்தேனே என் செய்வேன்!

அவல வயிற்றை வளர்ப்பதற்கே
அல்லும் பகலும் அதனினைவாய்
கலவைப் படுவ தன்றிசிவ
கனியைச் சேர்க் கருத்திலென்
திவலை யொழிக்கும் திருத்தணிகைத்
திருமால் மருகன் திருத்தாட்குக்
குவளைக் குடலை யெடுக்காமல்
கொழுத்த வுடலை யெடுத்தேனே

நாம் நம் வயிறை வளர்பதற்கே இரவுபகலாய் பாடுபட்டு பணம்
சேர்த்து பாழாய் போகிறோம். வயிறு வளர்க்க சாப்பாடு சாப்பாடு
என கூப்பாடு போட்டுத் திரிகிறோம். அதாவது சா + பாடு = சாப்பாடு
- நாம் வாழ்வதற்காக சாப்பிடுகிறோமா என்றால் இல்லை! சாவுக்காக
பாடுபடுகிறோம். சா-பாடு எனத்தானே மனிதன் அலைகிறான். உயிர்வாழ
சிறிது உணவு உண்பவனே ஞானம் பெறுவான்! உடல் வாழ ருசித்து
ரசித்து சாப்பிட்டு சாவை வரவேற்பவரே அதிகம். சாப்பாட்டிலேயே
கவனம் சென்று விடுவதால் உலக வாழ்வே போராட்டமாகி விடுவதால்
மனிதன் அதற்காகவே கவலை படுகிறான். நம்மிடம் உள்ள சிவ கனியை
அறியாது போய் விடுகிறான். சிவமாகிய ஒளியின் கனி சண்முககனி.
கண்மணி ஒளி நம் எல்லா துன்பங்களையும் போக்கும் நம் தணிகாசல
மூர்த்தி திருவடியில் கண்மணியில் சரண் ஆனவன் தப்பித்து கொள்வான்.
இல்லாதவன் அந்த தணிகாசல மூர்த்தி அமர்ந்த குவளை மலரை
அறியாமல் கொழுத்த உடலை எண்ணியே மாழ்வான்.

Wednesday, 4 January 2017

48 போற்றித் திருவிருத்தம்



கங்கையஞ் சடைசேர் முக்கட்
கரும்பருள் மணியே போற்றி
அங்கையங் கனியே போற்றி
பங்கையன் முதலோர் போற்றும்
பரம்பரஞ் சுடரே போற்றி
சங்கைதீர்த் தருளும் தெய்வச்
சரவண பவனே போற்றி


வற்றாத கங்கையென கண் நீர் பெருகிவரும் ஒளி கலையே
சடை என்பது. சூரிய சந்திர அக்னி என மூன்று கண் பெற்ற -
தோன்ற அருளும் கண்மணியே போற்றி. அ வாகிய கையின்
உள்ள கனி போன்றது கண்மணி ஒளி போற்றி. பங்கயம் என்றால்
தாமரை. தாமரை - தாள் மறை திருவடி மறைந்துள்ள ஒளியே
போற்றி. அந்த ஒளிக்குள் ஒளிரும் பரஞ்சுடரே போற்றி நம் எல்லா
ஐயங்களும் கண்மணி ஒளியால் தீரும்! ஒளியே கண்மணி ஒளியே
போற்றி.

விண்ணுறு சுடரே என்னுள்
விளங்கிய விளக்கே கண்ணுறு மணியே - பாடல் 6

விண்ணில் விளங்கும் சுடரே என்னுள் விளங்கும் ஒளிவிளக்கு
அது கண்ணில் உறும்மணியின் உள் ஒளியே.

துறையெலாம் விளங்கு ஞான சோதியே - பாடல் 7
நம் உள்புகும் வாசல் - நம் உடம்பின் உள் ஒளியை அடைய -
உள்ளே போக வாசல் துறைமுகம் - துறையில் விளங்கும் ஞான
சோதியே, அகத்தியர் "துறையறி விளக்கம்" என 100 பாடல் எழுதி
கண்மணி திறத்தை விளக்கியுள்ளார். வள்ளல் பெருமானும் எல்லா
துறையிலும் விளங்கும் ஞான ஜோதி என எல்லார் கண்ணிலும்
விளங்கும் ஜோதியை கூறியிருக்கிறார். கடலில் இருந்து கப்பல்
துறைமுகம் வந்து தானே நாட்டுக்குள் போக முடியும். அதுபோல்
சம்சார கடலில் தத்தளித்த நாம் துறைமுகம் அறிந்து அங்கே
நங்கூரம் பாய்ச்சி கப்பலை நிறுத்தி பின் நாட்டுக்குள் - கண்மணி
வீட்டுக்குள் புக வேண்டும்.

ஆதி நின்றாள்கள் போற்றி
அனாதி நின்னடிகள் போற்றி

ஆதியும் அனாதியுமான தாள்கள் நம் கண்மணி. இறைவன் திருவடியே.
முதலும் முடிவானவன் அருட்பெருஞ்சோதி ஆண்டவனே



ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருஅருட்பாமலை

Tuesday, 3 January 2017

47 இங்கிதப்பத்து



சீர்வளர் குவளைத் தார்வளர் யுயனார் சிவனார்தம்
பேர்வளர் மகனார் கார்வளர் தணிகைப் பெருமானார்
ஏர்வளர் மயின்மே லூர்வளர் நீயமத் திடைவந்தால்
வார்வளர் முலையார் ஆர்வளர் கில்லார் மயலம்மா

குவளை மலர் சூடிய சிவனாரின் பேர் பெற்ற மகன் குகன்
கருமேகங்கள் சூழ்ந்த தணிகை மலையான் மேலோங்கி வளரும்
பலவர்ண ஒளியையுடைய செவ்வேள் மயில் மேல் ஊர்ந்து செல்லும் அழகை
கண்டால் வாரால் மறைக்கப்பட்ட, வினையால் திரையால் மூடப்பட்ட
கண்ணை கண்டால் யாருக்கு தான் ஆசை வராது. கச்சணிந்தமுலை
என்பது திரை மறைத்தகண் எனப்படும்.

தணிகேசர் தந்தாரென்பால் தந்தாரென்னைத் தந்தாரே -பாடல் 2

நான் என் மனம் தணிந்த கண் ஒளியை விழித்து நிலை நிறுத்தி
தியானம் செய்யும் போது தந்தார் என்னிடம் என்னையே! அதாவது
என்னையே நான் காண தந்தார் என் கண்மணி ஒளியான இறைவன்.

வந்தேன் னினிமேல் வாரேன் என்றார் மனமாழ்கி நொந்தேன்
முலைமீதவ்வரை என்றார் - பாடல் 5

நம் கண்மணி ஒளியில் வெளியில் வந்தேன். இனிமேல் வருகிறேன்
என்றார்.புரியாது மனம் பேதலித்தேன். முலைமீது அவ்வுரை என்றார்..
முலை என்றால் கண். கண்மணி மீது ஒளியாக வருகிறேன் என
பரிபாசையாக கூறியதாகும்

Monday, 2 January 2017

46 தேவாசிரியம்



யாரது யும்கடு விழியினால் மயக்கும்
ஏந்திழை யவர்  வெந்நீர்த்
தாரை தன்னையும் விரும்பிவீழ்ந் தாழ்ந்தவென்
றனக்கரு ளுண்டாமோ
காரை முட்டியப் புறஞ்செலும் செஞ்சுடர்க்
கதிரவ னிவராழித்
தேரை யெட்டுறும்  பொழில்செறி தணிகையில்
தேவர்கள் தொழுந்தேவே

பெண் மயக்கத்தில் ஆழ்ந்து கெட்டுப் போகாதீர்கள். ஏட்டுறும்
பொழில் செறி தணிக்கையில் - எட்டு 'அ' வலது கண் - சூரியன்
உறுகின்றதில் நம் மனம் தணிந்து தவம் செய்தால் கிட்டும் ஞானம்.
சூரியனின் தேர் ஒரு சக்கரம் உடையது. வலது கண்மணி
1 சக்கரம். எட்டுகுதிரை பூட்டியது என்பது பரிபாஷை. எட்டுதிக்கும்
பாயும் ஒளி சூரியஒளி எவ்வளவு பெரிய ஞானம் வள்ளலார்
உரைத்துள்ளார் பாருங்கள்! அகவழிபாடே! அனைத்தும் ஞானமே!


ஞானசற்குரு சிவசெல்வராஜ்
திருஅருட்பாமாலை
www.vallalyaar.com