57. மருட்கை விண்ணப்பம்
யாது செய்துகொன் போதுபோ கின்ற
தண்ணெ னேஉம தன்பருக் கடியேன்
கோது செய்யினும் பொறுத்தருள் புரியும்
கொள்கை யீர்எனைக் குறுகிய குறும்பர்
வாது செய்கின்றார் மனந்தளர் கின்றேன்
வலியி லேன்செயும் வகைஒன்றும் அறியேன்
மாதர் செய்பொழில் ஒற்றியூர் உடையீர்
வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே
மாதர் செய்பொழில் ஒற்றியூர் உடையீர் = பெண்களினால் - கருவிலே உருவாக்கப்படுகின்ற பொலிவான - அழகான தோற்றம் கொண்ட கண்களிலே ஒற்றியிருக்கின்றவரே, வண்கையீர் என் கண்மணி அனையீரே - அருள்மழை பொழியும் கைகளை உடையவரே - அருள் விளங்கும் என் கண்மணியான அருட்பெருஞ்ஜோதி இறைவா! உன் அன்பருக்கும் அடியேன் எக்குற்றம் புரியினும் பொறுத்து அருள்புரியும் இறைவா!
என்னை அடுத்த குறும்பர் அறியாமையால் வாதம் செய்கின்றனர். மெய்ப்பொருள் அறியாததினால்! என் மனம் தளர்ந்து போகிறது. வேதனைப்படுகின்றேன். இதுபோன்றோரை எதிர்த்து வெற்றி கொள்ளும் வலிமை இல்லையே! என்ன செய்வது என்று அறியாமல் திகைக்கின்றேனே இறைவா! என்ன செய்வது? காலம் போகின்றதே அருள்புரிக இறைவா?
காமமாம் கடலில் ஆழ்ந்தால் வஞ்சக கொடிய வாழ்க்கை எனும் திமிங்கலம் நம்மை விழுங்கிவிடும்! அதிலிருந்து தப்ப வேண்டுமென்றால் அருள்பொழியும் நம் கண்மணியில் ஒற்றியிருக்கும் அருட்பெருஞ்ஜோதி இறைவனை சரண்புக வேண்டும் - பாடல்-3
ஊழ்வினையை நாம் அறியமாட்டோம். அந்த பாழாய்ப் போனவினை நம்மை மேலும் மேலும் வினைகளிலே ஆழ்த்திவிடும்! வினைகளை போக்க ஒரே வழி, இறைவா என் கண்மணி ஒளியானவரே உன் அருள்பெறுவது ஒன்றுதான்! - பாடல் 7
இறப்பிலார் தொழும் தேவரீர் பதத்தை - பாடல் 8
இறப்பு இல்லாமல் என்றும் வாழ வேண்டுமானால் - மரணம் இல்லாத பெருவாழ்வு கிடைக்க வேண்டுமானால் நம் கண்மணியில் ஒளியாக துலங்கும் இறைவன் திருவடியை பற்றவேண்டும். சரணடையவேண்டும். அப்போதுதான் இறைவன் பரிபூரண
எல்லா துயரங்களிலிருந்தும் விடுபடலாம்!
சஞ்சி தந்தரும் காமம்
ஒவ்வொரு மனிதனும் செய்யும் செயல்கள் அனைத்தும் பாவ புண்ணியமாக அவரவர்க்கே திரும்பி வருகிறது. அவை பிராரத்துவம் - ஆகாமியம் - சஞ்சிதம் என மூன்று வகைப்படும்.
சராசரி மனிதனுக்கு பிராரத்துவம் பிறப்பாகி வருகிறது. பிறந்து வாழ்வதில் ஆகாமியம் நடக்கிறது. அவரவர் வினைக்கேற்ப, நல்லது கெட்டது - பாவ புண்ணியம் கூடவோ குறையவோ செய்கிறது. சராசரி மனிதன் வாழ்வு இதிலேயே முடிந்து போகிறது.
ஆனால் சாமான்யன் ஆன்மீக சாதனை செய்பவன் - சற்குருவை பெற்று, ஞானஉபதேசம் - திருவடி தீட்சை பெற்று தவம் செய்பவன், ஆகாமியம் தவத்தால் உருவாகாது செய்து விடுகிறான்! பிராரத்துவம் குருவருளால் சிறிது சிறிதாக குறைந்து இல்லாது ஆகிவிடும். அதன் பிறகுதான் சஞ்சிதகர்மம் வந்து தாக்கும். குருவை நாடி ஞானதீட்சை பெற்று தவம் செய்பவனுக்குதான் சஞ்சிதகர்மம்! மற்றவர்க்கில்லை
-ஞான சற் குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
No comments:
Post a Comment