Saturday, 27 June 2026

59. திருக்காட்சிக்கு இரங்கல்



59. திருக்காட்சிக்கு இரங்கல்

மண்ணோயும் வாழ்க்கையிடை மாறாது வன்பிணியால்
புண்ணோயும் நெஞ்சம் புழுங்குகின்ற பொய்யடியனேன்
கண்ணோயும் இன்பப் பரஞ்சுடரே என்இரண்டு
கண்ணே உன்தன் பொன்முகத்தைக் காணக் கிடைத்திலனே

உலக வாழ்க்கையில், மாயையில் சிக்கி சிறுத்து தீராத நோயால் துன்புற்று நெஞ்சம் புண்பட்டு வேதனையால் துயரப்படுபவர் புழுவில் மண்ணில் தான் போய் சேருவர். இதிலிருந்து விடுபட நம் இரண்டு கண்களில் துலங்கும் ஒளியாகிய இறைவனின் பொன் முகத்தை தவம் செய்து காணவேண்டும். காணாவிடில்! ஒளியை கண்டவர் திகைத்து வார்த்தையும் கேட்பர்! இன்பத்தை - பேரின்பத்தை தரும் பரஞ்சுடர் - பரமாத்மா நம் இரண்டு கண்களிலும் உள்ளார்!

அருள் ஆனந்த மூக்கனைக் கண்டேனே - பாடல் 2

நம் இருகண்களில் துலங்கும் ஒளியை எண்ணி உணர்ந்து தவம் செய்தால் உள்ளே உள்ளே அக்கினியை உணர்வு பெறும் - ஒளிபெருகும் - துலங்கும். ஆகவே நமது மூன்றாவது கண்!? அருள மயமான முக்கண்சிவம்  பெற்ற பிள்ளையல்லவா நாம்? நமக்கும் மூன்று கண்தான்! தெரிகின்ற இருகண் ஒளியை பெருக்கினால் - சுழித்தால் மூன்றாவது கண் துலங்கும்!?

தாயானவனே என் தந்தையுமாய் அன்புஅதனைச் சேயாய் வளர்க்கும் சிவனே .......... பாடல் - 4

இறைவனே நமக்கு உயிர்தந்தவன் ஆதலால் தாய்! நம்மை வளர்த்து கருவிலே உருவாக்குபவர் அதனால் தந்தை! தாயும் அவனே! தந்தையும் அவனே! அதனால் தான் ஞானியர் இறைவனை “அம்மையப்பன்” என்றழைத்தனர்.

யார் அவனை - சிவனை உணர்ந்து சரணடைகிறார்களோ? அவர்களை சேயாய் பிள்ளையைப்போல் போற்றி பாதுகாத்து வளர்த்து ஆளாக்குவான்!

உடலை தந்த தாய் தந்தையும் அழிந்து விடுவர்! நம் உடலும் அழிந்துவிடும்! இறைவனை உயிர்தந்த அம்மையப்பனை சரணடைந்தால் உடலும் அழியாது! உயிரின் ஆற்றலை ஒளித்தன்மையுடைய உடலும் பெறும்!? இதைத்தான் வள்ளல்பெருமான் உரைக்கின்றார்.

உயிர்தந்த தாயும் தந்தையும் குருவுமான இறைவனை அருட்பெருஞ்ஜோதியை உணர்பவனே முக்தியடைகிறான்! மரணமிலா பெருவாழ்வு பெறுகிறான்! ஞானியாகிறான்! சித்தனாகிறான்!

கண்ணும் கருத்தும் களிக்கவைக்கும் கற்பகமே ....... பாடல் 6

இறைவன் தான் கற்பகம்! எல்லாந்தரும் பரம்பொருள்! அருள்மழை பொழியும் அருட்பெருஞ்ஜோதி! அவனை நினைத்து தவம் செய்தால் நம் கண்கள் களிப்படையும் வண்ணம், ஆனந்த பரவசநிலை, பேரின்பம் கிட்டும். எண்ணமெல்லாம் அந்த சிவமே

ஒளியே துலங்குவதால் கருத்தில் வேறுஒன்றுமில்லாமல் அதிலும் பரவச நிலை கூடும்! சிந்தனை பார்வை எல்லாமே ஒளிமயமாகும்! பார்க்குமிடம் எங்கும் நீக்கமற எங்கும் ஒளிவெள்ளமாக பரம்பொருளாக காணலாம்! மகிழலாம்!

முக்திக்குவித்தே நின்பொன்னடிக்கீழ் மேவிநிற்க .. பாடல் 9

உலக மாயையில் மயங்காமல், இறைவா உன் பொற்பாதம் சரணடைவதே என் கடன் என யார் தம் மெய்ப்பொருளில் - தன் கண்மணி ஒளியான - இறைவன் திருவடி நிழலில் தங்குகின்றனரோ அவரே முக்தியை அடைவர்! இறைவன் திருவடியாகிய தம் கண்மணி ஒளியில் யார் சரண்புகுகின்றார்களோ! அவரே புத்திசாலி!? இதுவே முக்திக்கு வழி! முக்திக்கு வித்து! இறைவன் பொன்னடி! நம் கண்மணி!

No comments:

Post a Comment