Friday 30 December 2016

43 திருவருட் பேற்று விழைவு


உலகம் பரவும் பரஞ்சோதி
யுருவாம் குருவே யும்பரிடைக்
கலகம் தருசூர்க் கிளை களைந்த
கதிர்வே லரசே கவின்தருசீர்த்
திலகம் தருவா ணுதற் பரையின்
செல்வப் புதல்வா திறதனால்
இலகுங் கலப மயிற் பரிமேல்
ஏறும் பரிசென் நியம்புகவே



உலக மெங்கெங்கினும் பரவி நிற்கும் பரம்ஜோதி யுருவான
குருவே, நம் மனத்தே வாழும் துருக்குணங்களாகிய அசுரர்களை
வேலால் அழிக்கும் சண்முக ஒளியே, அழகான திலகமென இரு
கண் உள் ஒளிர்ஒளியே நெற்றிக்கு உள்ளே விளங்கும் சோதியே!
சக்தியின் புதல்வனே! தவம் மேலோங்கிய நிலையில் முதலில்
ஊர்ந்து செல்லும் மயில் பின் குதிரை போல் வேகமாக உள்
ஓடிடும் திறத்தை என் சொல்வேன் என்கிறார் வள்ளலார்?

அடியார்க்கு கடிமையாக்குகவே - பாடல் 3
இறைவா உன் திருவடி அறிந்து உணர்ந்து தவம் செய்யும் மெய்யடியார்க்கு
நான் அடிமையாவது என் பெரும் பாக்கியமே! அருள்புரி தணிகை பெருமானே.

சடமான மலத்தால் வருந்தாப் பெருவாழ்வால் மகிழ்வேன். பாடல் 7
நமது உடலே மும்மலங்கலால் ஆனது. உண்டதெல்லாம் மலமே
இந்த மலமான உடலால் வருந்தாமல், என் கண்மணி ஒளியை
பெருக்கி மலத்தை அகற்றி இவ்வுடலை தூய ஒளியுடலாக்கி வாழ்வேன்
மகிழ்வேன் என்கிறார் வள்ளலார்!

சீறும் பிணியும் கொடுங்கோளும் தீயவினையும் செறியவே - பாடல் 10
கொடிய நோய்கள் நவகோள்களால் வரும் துன்பங்கள் நாம் செய்த வினையால் உறும் கஷ்டங்கள் யாவும், ஆறுமுகமான ஒளிக்கடவுளை - நம் கண்மணி ஒளியை  நாம் பற்றினால் இல்லாது  போதும்!

அதன் பின் பரந்த இவ்வுலகில்  எருமைவாகன எமன் அதிகாரம் செல்லாது
போய்விடும்! மரணம் மரணமடைந்து விடும்.

No comments:

Post a Comment