Wednesday 28 December 2016

42 திருவருள் விலாசப்பத்து


ஆறுமுகப் பெருங்கருணை கடலே தெய்வ
யானைமகிழ் மணிக்குன்றே அரசே முக்கட்
பேறுமுகப் பெருஞ்சுடர்க்குட் சுடரே செவ்வேல்
பிடித்தருளும் பெருந்தகையே பிரம ஞானம்
வீறுமுகப் பெருங்குணத்தோர் இதயத் தோங்கும்
விளக்கமே ஆனந்த வெள்ள மேமுன்
தேறுமுகப் பெரியவருட் குருவா யென்னைச்
சிறுகாலை யாட்கொண்ட தேவ தேவே


ஆறுமுகங் கொண்ட கருணைக்க கடலே  தெய்வயானை மகிழும்
கண்மணியே, அரசே, மூன்று கண் உடைய பெருஞ்சுடர்க்குள் ஒளிரும்
சுடரே, வேல்கொண்ட முருகனே, பிரம்மஞான கொண்டோர் இதயத்தில்
- இரு உதயத்தில் ஓங்கும் ஒளியே, ஆனந்தத்தை தருபவனே. என் சிறு
வயதிலே என்னை ஆட்கொண்ட தேவர் தேவனே என வள்ளலார் பாடுகிறார்.

நின்னிருதாள் துணை பிடித்தே வாழ்கிறேன் - பாடல் 3

இறைவா உன் இருதிருவடியே துணை என - அதன் ஒளியை பிடித்தே
வாழ்கிறேன்,

கல்வியெலாங் கற்பித்தாய் நின்பால் நேயம் காண வைத்தாய்
இவ்வுலகம் கானல் - பாடல் 3

இறைவா உன் திருவடிகளை பற்றியதால் நீ எனக்கு எல்லா கல்வியும்
கற்பித்தாய்! உன்மேல் அன்பு கொள்ள வைத்தாய்! இவ்வுலக வாழ்க்கை
கானல் நீர் போன்றது என அறியவைத்தாய்!

கற்றறிந்த மெய்யுணர்ச்சி யுடையோ ருள்ளக் கமலத்தே யோங்கு
பெருங் கடவுளே - பாடல் 7

சாகாக்கல்வி கற்ற - குருமூலம் உபதேசம் பெற்றவர் மெய்யுணர்வு
பெறுவர். அவர்கள் உள்ளமாகிய இருதய கமலத்தில் ஓங்கி ஒளிரும் பெருங்கடவுளே!

என்னிரு கண்மணியே எந்தாய் என்னை ஈன்றானே - பாடல் 10
என் இரு கண்மணி ஒளியே - கண்மணியில் ஒளியாக உயிராக இருப்பதால் -
உயிர்கொடுப்பதால் தாய்! என்னை பெற்றதால் ஈன்றவன் தந்தை! எனக்கு உயிர் கொடுத்து தாய் ஆனவன் பெற்றதால் தந்தையுமானான்! இறைவனே அம்மை அப்பன்! உலகில் நமக்கு உடலைத் தந்தது தாய் தந்தை என இருவர்! உயிர் தந்தது தாயுமானவன்!  இறைவன்!

No comments:

Post a Comment