Monday 26 December 2016

41 பவனிச் செருக்கு


பூவுண்டவெள் விடையேறிய புனிதன்தரு மகனார்
பாவுண்டதோ ரமுதன்னவர் பசுமாமயில் மேல்வந்
தாவுண்டன ரெனதின்னலம் அறியாரென விருந்தால்
நாவுண்டவர் திருமுன்பிது  நலமன்றுக் கெனவே
பூ- உண்ட கண்மலர் உள் உள்ள சிவம் வெள்ளை ஒளியாகிய
நம் தீயின் மேலேறி வரும் செந்தீயே! செந்தீயின் சிவனின்
மகன் ஆறுமுகன் நம் கண்மணி ஒளி! நாம் தவம் செய்து கிட்டும்
அமுதம் அகத்தே கொண்ட பச்சை ஒளியின் மேலமர் செவ்வேள் -
செம்மை ஒளி. நாம் தவம் செய்து - கண்மணி ஒளியை நினைந்து
கண் திறந்த நிலையில் உணர்ந்து நெகிழ்ந்தால் இவ்வனுபவம்
காணலாம்!

பசுமயில் மேல் நின்றார் - அது கண்டேன் கலை நில்லாது
கழன்றது - பாடல் 2

பச்சை நிற ஒளிமேல் செவ்வேள் சிவந்த ஒளியான முருகனை
கண்டதும் கண் ஒளி கலை பிரிந்து உள் சென்றது! அதாவது
முருகனை கண்கொட்டாது பார்த்து கொண்டே இருந்தால்
இங்ஙனம் ஒவ்வொரு கலையாக ஒளி பிரிந்து அடுத்த
கலையுடன் சேர்ந்து முடிவில் அக்னி கலையுடன் சேரும்.
மூன்று கலையும் சேர்வதே முழுமையாக சேர்ந்தால்
காணலாம் வேலை! முக்கண்ணை! முச்சுடரை! இதுவே
ஞான நிலை!

மயிலின் மிசை நின்றாரது கண்டேன் நீரார் விழி யிமைநீங்கின
-பாடல் 3


பச்சை மயில் ஏறிவந்த முருகனை கண்டதும் நீர் செரிந்தபடி
இருந்த என் கண்கள் நிலைத்து இமையாமல் நின்று விட்டது.

ஒன்றோடி ரண்டெனும் கண்ணினர் திருமகனார் என்றோடி - பாடல் 4

நாம் கண்மணி ஒளியை நினைந்து உணர்ந்து தவம் செய்யும் போது
இடது கண்ணில் ஆரம்பித்து அங்கிருந்து வலது கண் சூரியனில் வந்து நிற்கும்.

மேல்கலை நீங்கின முலைவீங்கின களிஓங்கின  - பாடல் 5

கண்மணி ஒளியை, கண்ணை திறந்து இருந்து தவம் செய்யும் போது
இடது கண் சந்திரனில் இருந்து சூரிய கலைகள்  சூரிய கலைகள்  - வலது
கண்ணிலுள்ளது அனைத்தும் வந்த பின் அதற்கு மேல் உள்ள கலைகள்
- ஒலிக்கலைகள் நீங்கி அக்னிகலையை சென்றடையும்.

சக்தியாம் சந்திரனை செங்கதிரோன் ஊடுருவில்
முக்திக்கு மூலம் அது - அவ்வைக்குறள்

அப்போது முலை வீங்கியது. இங்கு முலை எனச் சொன்னது பெண்ணின்
மார்பை அல்ல! கண்ணைத்தான் பெண் மார்பு போல கண் இருப்பதால்
கண்ணைத்தான் முலை என்றனர்! அதாவது நாம் தொடர்ந்து கண்ணை
திறந்து தவம் செய்து செய்தால் உள் ஒளி பெருகி உள் ஓடும். ஒளி
உணர்வால் பெருகுவதால் சற்று வீங்கும் கண்! இது தியான அனுபவம்!
அந்த நிலை மிகவும் ஆனந்த பரவசமான நிலையே! இதைத்தான் வள்ளலார்
சொன்னார்.

No comments:

Post a Comment