Thursday 22 December 2016

38 தரிசன வேட்கை


வேல்கொளும் கமலக் கையனை எனையாள்
மெய்யனை ஐயனை யுலக
மால்கொளும் மனத்தர்  அறிவுரு மருந்தை
மாணிக்க மணியினை மயில்மேல்
கால்கொளும் குகனை எந்தையை யெனது
கருத்தனை அயனரி யரியாச்
சால்கொளும் கடவுள் தனியருள் மகனைத்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே


என்னை ஆண்டு கொண்டிருக்கும் மெய்ப்பொருளே, தாமரை
கையில் வேல் ஏந்தியவனே தலைவனே, உன்னை உலக
மாயையில்  சிக்கிய மனமுடையார் அறியமாட்டார். உலக
மாயை மயக்கம் தீர ஒரே மருந்து உன் திருவடியை பற்றி
நிற்பது தான்! மாணிக்கம் போல் ஒளிவிடும் கண்மணியில்
பலவர்ண ஒளிக்கு மேலாக ஒளிர்பவனே! கண்மணி குகையில்
உள்ளவனே என் தந்தையே என் கருத்தாக இருப்பவனே
பிரம்மாவும் விஷ்ணுவும் அடிமுடி தேடியும் அறிய முடியாத
சிவ மைந்தனே என் குறை தணியும் கண்மணியில் உனை
கண்டு வாழத்துவேன்!

 தண்ணனை யெனது கண்ணனை யெனது தணிகையிற் கண்டு - பாடல் 2


குளிரிச்சி பொருந்திய எனது கண்ணின் மணியின் ஒளியை எனது மனம்
தணிந்த நிலையில் கண்டு வணங்குவேன்!

என்னுடைய யியுரை யான்பெறும் பேற்றை என்னுடைப்
பொருளினை யெளியேன் என்னுடைய குருவின் வடிவினை
யென்கண் மணியினை - பாடல் 3

என்னுடைய உயிராக இருப்பவனும் நான் பெறும் பெரும்
பேறானவனும் என்னுடைய மெய்ப்பொருளாக விளங்குபவனும்
என் குருவாக வந்து வழிகாட்டுபவனுமான என் கண்மணி ஒளியே!

அழகனை செந்திலப்பனை மலைதோறாடல் வாழ்
அண்ணலை - பிணிக்கோர் காலனை - பாடல் 8


அழகான கண்ணே, சிவந்த கண்களில் இருக்கும் - துலங்கும்
அப்பன் - என் தந்தையே - செந்திலப்பன்! மலை தோறாடல் வாழ்
அண்ணலை. எங்கெலாம் மலை இருக்கிறதோ அதிலெல்லாம்
முருகன் இருப்பான். நம் கண்மலையே முருகன் வாழும் இடம்.
எல்லோர் கண்களிலும் முருகன் தோன்றுவான்! பிணிக்கோர்
காலண் - நம் பிறவிப்பிணியை ஒழிக்கும் எமன் நம் கண்மணி
ஒளியான முருகனே!


முத்திக் கொருவித்தை துரியனை துரியமும் கடந்த சத்தனை - பாடல் 9
நாம் முத்தியடைய வித்தாக இருப்பது நம் கண்மணி ஒளியே. அது துரிய
நிலையில் கைகூடும். துரியாதீத நிலையில் தசவித நாதமும் கேட்கும்.

வினையை தள்ளவந்தருள் செய்திடுந்தயாநிதி - பாடல் 10
நம் இருவினைகளை நீக்கி நம்மை தூய்மையாக்கி முக்தி தந்தருளும்
தயாநிதி சண்முகக் கடவுளே நமகண்மணி ஒளியே!

No comments:

Post a Comment