Wednesday 7 December 2016

37 கூடல் விழைதல்



சகமா றுடையார் அடையார் நெறியார்
சடையார் விடையார் தனியானார்
உகமா றுடையார் உமையோர் புடையார்
உதவும் உரிமைத் திருமகனார்
முகமா றுடையார் முகமா றுடையார்
எனவே என் முன் வந்தார்
அகமா ருடையேன் பதியா தென்றேன்
அலைவாய் என்றார் அஃதென்ன


நல்ல நெறியோடு வாழாமல் உலகில் துன்மார்க்கர் மாறுபட்டு
வாழ்பவர் நந்தியில் அமர்ந்த தனித்தன்மை வாய்ந்த சிவத்தை
அடைய முடியாது! எல்லா யூகங்களிலும் என்றும் அழியா ஒரே
அருட்பெருஞ்சோதி ஆண்டவர் சக்தியை இடப்பாகம் கொண்டு
அதால் உலக மக்களுக்கு உதவும் படியாக சண்முகக்கடவுளை
பெற்றவர். சண்முகம் - ஆறுமுகப்பெருமான். முகம் மாறி நம்
இரு கண்களாக நம் முன்  வருவார்! மனம் பேதலித்து நீ யார்
என கேட்டேன் எங்கிருக்கிறாய் என கேட்டேன். அலைவாய் என்றார்
ஆறுமுகப் பெருமான். நம் மனம் அலைபாய்கின்ற வாய் - வாசல்
அதாவது மனம் இருக்கும் மனம் இருக்கும் கண்மணி மத்திய பகுதி
உள் ஒளி.

இறைவன் நம்முள் எப்படி இருக்கிறார் என்பதை ஒவ்வொரு பாடலிலும்
வள்ளல் பெருமான் விதம் விதமாக கூறி அருளியுள்ளார்கள். அருட்பா
முழுவதும் அருள் ஞானமே!

No comments:

Post a Comment