Tuesday 6 December 2016

35 நாவளம் படாமை வேண்டல்

குன்றமொத் திலங்கு பணைமுலை நெடுங்கண்
கோதையர் பால்விரைந் தோடிக்
சென்றவிப் புலையேன் மனதினை மீட்டுன்
திருவடிக் காக்கு நாள் உளதோ
என்றனி யுயிரே யென்னுடைப்பொருளே
என்னுளத் தினிதெழும் இன்பே
மன்றலம் பொழில்சூழ் தணிகையாம் பொருப்பில்
வந்தமர்ந் தருள் செயு மணியே

நம் மனமானது இருவினைகளை நிற்கின்றதால் காமம் மோகம்
முதலியவைகளால் எளிதில் கவரப்பட்டு இறைவனை உணர
விடாமல் அலைகழிக்கும். உடல் மீது இச்சை கொண்டு
அலைபவனே புலையன்! புலையன் என்று ஒரு ஜாதி இல்லை!
என் உயிராக என்கண்மணி உள் இருக்கும் ஒளியே !
என்தீய மனத்தை மீட்டு உன் மெய்ப்பொருளில் நிலை நிற்கச்
செய்வாயாக!


மறைக்குளே மறைந்தம் மறைக்கரியதாய
வள்ளலே யுள்ளகப் பொருளே - பாடல் 3

நான்கு வேதங்களிலும் பரிபாசையாக சொல்லப்பட்டது நம் உள்
அகப்பொருள் - ஒளி கண்மணி உள் உள்ள ஒளி!  மறைத்து
சொல்லப்பட்டதால் மெய்ப்பொருளை - இறைவனை மறைத்து
சொல்லப்பட்டதால் வேதங்களை மறை - நான் மறை என்றனர்.
வேதங்களில் சொல்லப்பட்டதாயினும் வேதங்களை ஓதுபவர்
அறியமாட்டார்கள். ஏனெனில் வெளிப்படையாக சொல்லாதது தான்
காரணம்! எப்படி எனில் கண்தானே பார்த்து படிக்கிறது! கண்ணில்தான்,
கண்மணியில் தான், கண்மணியின் உள் உள்ள ஒளிதான் நம்மை
காக்கும் இறைவன் நம் உயிராக துலங்கும் இறைவன் என்பது
தெரியாதல்லவா ?!  அதுபோலத்தான்! இதை அறிந்தவன்
சொன்னால்தான் அறியமுடியும்! அப்படித்தான், அறிந்தவன்
மூலம் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்
பரிபாசையாக சொன்னார்கள் ஞானிகள்! அறிந்து சொல்பவன் குரு!
தெரிந்து கொள்ள வருபவன் சீடன்! கண்ணால் எல்லாம் பார்க்கிறோம்.
கண்ணை பார்க்க முடியுமா? தவத்தில் தான் நம் கண்ணை நம் கண்மணி
ஒளியை நம் உயிரான இறைவனை காண முடியும்! கண்ணை திறந்தால்
தான் உன் உள் ஒளியை காணலாம்! திறப்பவர் தான் குரு! தகுந்த ஆச்சாரியன்
மூலம் தங்கள் நடுக்கண்ணை திறக்கப்பெற்று கொள்வது நலம்" என வள்ளல் பெருமான் vஉபதேசித்துள்ளார்!

No comments:

Post a Comment