Saturday 24 December 2016

39 நாள் எண்ணி வருந்தல்


இன்னும் எத்தனை நாள்செலும் ஏழையேன்
இடர்க்கடல் விடுத்தேற
மின்னும் வேற்படை மிளிர்தரும் கைத்தல
வித்தக பெருமானே
துன்னு நற்றணி காசலத் தமர்ந்தருள்
தோன்றலே மயிலேறி
மன்னு முத்தம வள்ளலே  நின்றிரு
மனக்கருத் தறியேனே

கைத்தல வித்தக பெருமானே - என் கைத்தலம் கண்மணி
அதனுள் இருக்கும் வித்தக பெருமான் ஒளியான ஆறுமுகம்.
இந்த கைத்தலம் பற்றினால் தான் முக்கண்ணும் முக்கலையும்
சேரும் வேல் கிடைக்கும். ஒளிக்கடவுளே இன்னும் எத்தனை
நாள் இவ்வுலக மாயையில் சிக்கித்துன்புற வேண்டுமோ!
என் மனம் தணிந்த நிலையில் விளங்கும் இடம் அமர்ந்த முருகா!
பலவர்ண ஒளியாக வந்து காட்சி தருபவனே காத்தருள்வாய்!

தணிகை வாழ் சுத்த சின்மயத்தேவே - பாடல் 2

கண்மணி ஒளி வெளிப்படுவது நம் வினை தீர்ந்து சுத்தமாகும்போது
சின்மயமான கண்மணியில் இருக்கும் தெய்வமே.

ஊழை நீக்கி நல்லருள் தருந்தெய்வமே -பாடல் 3

நமது ஊழ்வினைகள் நீங்க வேண்டுமாயின் தணிகையில் அமர்ந்த
ஜோதிஸ்வரூபமான சண்முகனை தரிசிக்க வேண்டும்.அக்கண்மணி
அருளால் வினை தீரும்.

என் ஆவியே எனை யாள் குருவடிவமே - பாடல் 5

நம் ஆவியே கண்மணி ஒளியாக நம்மை ஆட்டுவிக்கும் நம்
குருவும் தணிகை தெய்வமே!

No comments:

Post a Comment