Monday 6 July 2020

74 . உள்ளப் பஞ்சகம்

                                        74 .  உள்ளப்  பஞ்சகம் 

           நீரார்  சடையது  நீண்மால்  விடையது  நேர்கொள்கொன்றைத் 
           தாரார்  முடியது  சீரார்  அடியது  தாழ்வகற்றும் 
           பேரா  யிரத்தது  பேரா  வரத்தது  பேருலகம் 
           ஓரா  வளத்ததொன்  றுண்டேமுக்  கண்ணொடென்  உள்ளகத்தே 

          ஒன்றுண்டேமுக்  கண்ணொடு  என்  உள்ளகத்தே!  என்  உள்ளம்  சூரியன்  சந்திரன்  
அக்னி  என  மூன்று  கலைகளை  உடையது!  மூன்று  கண்!  அது  வற்றாத  கங்கை -  நீர் 
நிறைந்தது.  நீண்டு  பெரிய  வெள்ளை  ஒளி!  அழகிய  பொன்னான  கொன்றை  பூப்போன்றது!
கண்மலர்!  மஞ்சள்ஒளி!  சீரான  இரு  திருவடிகள் -  இரு  கண்கள்.  அடியார்களின்  எல்லா 
துன்பங்களும்  நீங்கும்  கண்  மணிஒளியாக  இறைவனை  பற்றினால்!  ஓர்  உருவம்  ஒரு 
நாமம்  இல்லை!  ஆயிரம்  நாமமுடையான்!  அகண்ட  இந்த  உலகத்தில்  எல்லாவற்றையும் 
அருளவல்லவன்  இறைவன்  ஒருவரே!  எல்லாம்  வல்லவர்!  எல்லாமானவர்!  இறைவன் 
ஒருவரே!

          தீக்கண்ணார்  நுதலது  கண்ணார்  மணியது  கண்டுகொள்ள 
                   ஒண்ணா  நிலையது ...........................    பாடல்  4

          நமது  கண்களில்  தீ  -  நெருப்பு  உள்ளது!  பெரும்நெருப்பு -  பேரொளி -  பெருஞ்ஜோதி 
சிறு  ஜோதியாக  நம்  கண்மணி  மத்தியில்  ஊசி  முனை  துவாரத்தின்  உள்ளே  உள்ளது.
இதுவே  எண்ணி  பார்க்க  முடியாத  மிகப்பெரிய  நிலை!  இரகசியம்.

         பிறவா  நெறியது  பேசாநிலையது  பேசில்  என்றும் 
                 இறவா  உருவது .................................   பாடல்  5

        நம்  கண்மணி  மத்தியிலுள்ள  ஊசி  முனை  துவாரத்தின்  உள்  அருட்பெருஞ்ஜோதி  
ஆண்டவர்  இருப்பதை  உணர்ந்து  தவம்  இயற்றும்  நெறியே  பிறவா  நிலையை  தருவதாகும்!
கண்மணி  பேசாதநிலை!  " கண்டவர்  விண்டிலர்  விண்டவர்  கண்டிலர் "  என்ற  பழமொழி 
இதுபற்றியே!  கண்டவர் -  கண்.  அது  பேசுமா?  பேசாது!  விண்டவர் -  வாய்.  அது  காணுமா?
காணமுடியாது!  காணும்  கண்  பேசாதல்லவா?!  மௌனமாகதானே  இருக்கும்?!  அதனால்தான் 
கண்ணை  " மௌனம் "  என்றார்!  பேசாநிலை  என்றால்  கண்தானே!  நாம்  தவம்  செய்யச் 
செய்ய  கண்மணி  ஒளி  -  இறைவன்  ஆத்மா  நமக்கு  குருவாக  அமையும்.  நமது  சூட்சுமசரீரமே 
-  ஆத்ம  சரீரமே  -  குருவாகும்.  அந்த  குரு  நம்முடன்  பேசுவார்!?  அந்த  நிலை  நாம்  பெற்றால் 
பேசா  மௌனமான  கண்ஒளி  பேசினால்  நமக்கு  இறவா  நிலை  கிட்டும்!  அந்த  உருவம்  ஜோதி
-  ஆத்மா  இறக்காது  அல்லவா?  ஆத்மாவை  உணர்ந்தவன்  மரணமிலா  பெருவாழ்வு  பெறுவான்.

           

No comments:

Post a Comment