Tuesday, 27 October 2026

64 பிரசாதப் பதிகம்


64 பிரசாதப் பதிகம்

சரதத் தால் அன்பர் சார்ந்திடும் நின்திரு
விரதத் தான் அன்றி வேறொன்றில் திருமோ
பரதத் தாண்டவ னேபரி திப்புரி
வரதத் தாண்டவ னேஇவ்வ ருத்தமே


இறைவன் திருநடத்திலிருந்து உருவானது தான் பரதநாட்டியம். ஓயாது நடமிடம் நிருத்தனே, உன் திருவடியை சரணடைந்து தவம் செய்யும் மெய்யடியார்களுக்கு எந்த துன்பமும் நெருங்காது! தவம் செய்வதே விரதங்களில் முதன்மையானது. அவர்களே உன் திருவருளை பரிபூரணமாக பெறுவர்.

நீதி மாதவர் நெஞ்சிடே நின்றொளிர்
சோதி யெழுத்தொ ழிலுடை மூவர்க்கும்
ஆதி யேனின்அ ருள்ஒன்றும் இல்லையேல்
வாதி யாநிற்கும் வன்பினி யாவுமே - பாடல் 8


இறைவன், நீதி வழுவா நெறிமுறையில் வாழும் நற்றவத்தவர் நெஞ்சத்தில் - கண்களில் நின்று ஒளிர்கிறான்! அந்த ஜோதியே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய முத்தொழில் புரியும் மூர்த்திகளுக்கும் ஆதியாவர்! அப்பட்டப் ஆதிபரம்பொருளே நம் உயிராக நம் கண்களில் ஒளியாக துலங்குகிறார்! அவர் அருள் இல்லையெனில் நமது எந்த பிணியும் போகாது! வைத்தியநாதபெருமானான அவர் அருளே எந்நோய்க்கும் நல்ல மருந்தாகும்.

பெத்தம் அற்றிடப் பெற்றவர்................ பாடல் 9

எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் நல்லருளே சகல நோய்களுக்கும் நல்ல மருந்தாகும்! ஜோதியை தரும் அருள்ஜோதியே இறைவனே வைத்தியநாதர் ஆகும்! பிறவிபிணியையே நீக்க வல்லது.

ஜோதி மருந்தே! அப் படிப் பட்ட அற்புத மருந்தான ஜோதி மருந்தை
பெற்றவரே நோய் நொடியின்றி மரணமிலா பெருவாழ்வு பெறுவர்.

63 எண்ணத் திரங்கல்

எளியேன்நின் திருமுன்பே என்உரைக்கேன் பொல்லாத
களியேன் கொடுங்காமக் கன்மனத்தேன் நன்மையிலா
வெளியேன் வெறியேந்தன் மெய்ப்பிணியை ஒற்றியில்வாழ்
அளியோய்நீ நீக்காயேல் ஆர்நீக்க வல்லாரே


திருவொற்றியூராகிய என் கண்மணியில் ஒளியாக என் உயிராக துலங்கும் இறைவா, கல்மனம் படைத்தபாவி எனது உடல் பிணிகளை நீதானே நீக்கி அருளவேண்டும். உன்னிடம் கூறாமல் நான் யாரிடம் கூறுவேன். துர்க்குணங்களால் நிரம்பிய என் உள்ளப்பிணியையும் நீதானே போக்கவேண்டும். அருள்வாய் இறைவா!

முன்னேசெய் வெவ்வினை தான் மூண்டதுவோ அலது நான்

இன்னே பிழைதான் இயற்றியதுண்டோ...... பாடல் 2

நமக்கு இப்பிறவி அமைந்தது நாம் முற்பிறப்பில் செய்த வினையின் காரணமாகவே! பிறந்தபின் ஏற்படும் துன்பங்கள் முன் வினையாலும், இப்பிறப்பில் செய்யும் வினைகளாலுமே தான்!

ஞான சற் குரு சிவசெல்வராஜ் 

62. நெஞ்சு நிலைக்கு இரங்கல்



62. நெஞ்சு நிலைக்கு இரங்கல்
ஆளாக நின்பொன் அடிக்கன்பு செய்திட ஐயநெடு
நாளாக இச்சைஉண் டென்னைசெய் கேன்கோடு நங்கையர் தம்
மாளா மயல்சண்ட மாருதத் தால்மன வாசிஎன்சொல்
கேளா தலைகின்றன தாழ்ஒற்றி மேவும் கிளர்ஒளியே

இறைவா உன்பொன் அடிக்கு அடிமைப்பட்டு அன்பு செய்திட
நெடுநாளாக ஆசை உண்டு ஆனால் என் மனமாகிய குதிரை
என் சொல் கேளாமல் காமம் முதலான கீடான எண்ணம்கொண்டு
தறிக்கெட்டு ஓடுகிறது. என்செய்வேன்! ஒற்றியிலுள்ள ஓங்கிவளரும்
ஒளியே இறைவா! மனமானது காற்றைவிட வேகமாக ஓடி நம்மை
மாயையில் சிக்க வைத்துவிடும். அதிலிருந்து தப்ப வேண்டுமாயின்
நம் கண்மணியில் ஒற்றியிருக்கும் கிளர்ந்து எழுந்து ஓங்கி வளரும்
ஒளியை - இறைவனை சரணடையவேண்டும்.

ஒளியாய் ஒளிக்குள் ஒளிர்ஒளியே ஒற்றி உத்தமநீ - பாடல் 2

நம் கண்மணியிலே ஒற்றியிருக்கும் உத்தமனான இறைவன்
ஒளியானவன்! கண்மணி ஒளிக்குள் விளங்கும் - ஒளிரும்
ஒளியானவன்! அருட்பெருஞ்ஜோதி ஆண்டவன் ஒளிக்குள்
ஒளியானவன்! அணுவுக்குள் ஒளியானவன்

ஒற்றிவாணா என் கண்ணினுண்மாமணியே...... பாடல் 7

திருவொற்றியூர் என்பது திருவாகிய இறைவன் ஒளியானவன்
நம் கண்ணினுள் விளங்கும் மணியிலே அதன் மத்தியிலே உள்ள
சிறு துவாரத்தின் உள் துலங்குகிறான்! திருவாகிய ஒளி
ஒற்றியிருப்பதால் நம் கண்மணியே திருவொற்றியூர் எனப்பட்டது.
ஒற்றிவாணன் - ஒளியே.




சதானந்த நாயகமே மறை நான்கினுக்கும் ஒன்றே உயர்ஒளியே
ஒற்றியூர் எம் உயிர்த்துணையே........ பாடல் 9



நம் உயிராக துணையாக நம் கண்மணி ஒற்றியிலே ஒளியாக
துலங்குகிறான் இறைவன்! அந்த இறைவனை பற்றினால் - நம்
திருவடியை கண்களை பற்றினால் எப்போதும் ஆனந்தமே!
பேரின்பமே! சதா ஆனந்த பரவச அனுபவமே! அந்த இறைவன்,
ரிக், யஜுர், சாம, அதர்வணம் என்ற நான்கு வேதங்களும்
உரைக்கும் ஒரே இறைவனான உயர்வான மேலான ஒளியே!



நால்வேதமும் சொல்லும் வேதநாயகம் நம் கண்மணியில் ஒளியாகதுலங்குகிறான்! நம் உயிராக விளங்குகின்றான்!என்றன் கண் இரண்டின் இணையாம் பரஞ்சுடரே அழியா நலமே
இன்பமே....... பாடல் 10

நமது இருகண்களிலும் இணையாக துலங்கும் அந்த இறைவன்
பரத்திலே - வெளியிலே - ஆகாயத்திலே உள்ள சுடரே - ஜோதியே!
நம் உடல் அழிந்தாலும் நம் உயிர் அழியாது! நம் கண்மணியில்
உயிராக பரஞ்ஜோதி இருக்கும் வரை நமக்கு நலமே விளையும்!
எல்லா இன்பமும் பெறலாம்!

பொருளே நின்பொன்டி ............... பாடல் 11

பொருள் என்றால் மெய்ப்பொருள்! நமது கண்மணி ஒளியே!
அதுதான் இறைவன் திருவடி! அந்த திருவடி - ஜோதி

தங்கமயமானது! தங்கம் போல் தகதகக்கும் ஜோதி - தங்கஜோதி.