Sunday, 12 October 2025

திருவடி புகழ்ச்சி - 1



திருவடி புகழ்ச்சி - 1

இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லது மற்
றென்றுவரு மோஅறியேன் எங்கோவே - துன்று மல
வெம்மாயை யற்று வெளிக்குள் வெளிகடந்து
சும்மா இருக்கும் சுகம்.

துன்று மல வெம்மாயை யற்று - கொடியமும் மலங்களான ஆணவமலம்
கர்மமலம் இதைவிட அதிக துன்பம் தரும் மகா மாயைமலம் ஆகியன
இல்லாமலாகி! வெளிக்குள் வெளிகடந்து - நம் கண்மணி உள்ளே அகண்ட பரவெளி உள்ளது, அதுவே உள்வெளி! அந்த உள்வெளிக்குள் வெளிகடந்து!

"சும்மா இருக்கும் சுகம்" - நம் மும்மலங்கள் இல்லமலாகி நம் கண்மணி ஊசிமுனை துவாரத்தின் உள்ளே உள்ள பரவெளியின் எல்லையை, உள்வெளி கடந்து போகவேண்டுமானால் "சும்மா இருக்கும் சுகம்" தெரிந்திருக்க வேண்டும். சும்மா இருந்தாலே - சுகம் பேரின்பம்
கிடைக்கும்! நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம்!? அது அதன் இயல்பான தன்மையில் இருக்கும்படி பார்த்துக்கொண்டால் போதும்!
 
நீங்கள் எதாவது செய்தால் எதாவது பலன் கிட்டும்! உங்கள் செயல் -வினை அதற்க்கு தகுந்த பாவ புண்ணியத்தை கொடுக்கும்! ஏற்கனவே இருக்கின்ற வினையோடு இந்த வினையும் சேர்ந்து கொள்ளும்! கர்ம வினைகளை தீர்கிறன்றேன் என்று ஏதோ ஒரு சாதனை செய்து அறியாமல் புரியாமல் மீண்டும் மீண்டும் வினைகளை சேர்த்துக்கொள்கிறன் மனிதன்!

அதற்குத்தான் ஞானிகள்ம் எதையாவது செய்தால் எதாவது வினை வந்திடும் அல்லவா? ஒன்றும் செய்யாமல் "சும்மா இரு" என்றார்கள்! சும்மா இருப்பது எப்படி? என்பதையே திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் திருவருட்பாவின் மூலம் நமக்கு விளக்கி அருளியுள்ளார்கள்! 

இந்த சும்மா இருக்கும் திறனை உபதேசித்து தீட்சை வழங்குவதே மிகப்பெரிய ஞான நிலையாகும்!
இப்பணியை தான் அடியேன் தொண்டாற்றுகிறேன்! வாருங்கள் சும்மா இருங்கள்! வந்தால்! இன்றே கிட்டும்! நாளைக்கு வந்தால் நாளைக்கு கிட்டும்! நாளை நாளை என நாட்களை கடத்தாதீர்! இப்படி ஒரு வாய்ப்பு உங்கள் வாழ்வில் இனி என்று வருமோ?
 
சும்மா இருக்கும் திறன் அறிந்து உணர்ந்து ஞான சாதனை செய்தால் இன்றே கிட்டும் பேரின்ப பெருவாழ்வு!

 
ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com